நானும் என் சமுர்த்தியும் 77ம் தொடர்.......
தற்போது சகல சமுர்த்தி வங்கிகளும் கணணி மயமாக்கல் பணிகளில் செயற்படுத்தப்பட்டு பெரும்பாலான சமுர்த்தி வங்கிகள் மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.
இக்கணணி மயமாக்கும் பணிகள் தற்போது தான் ஆரம்பிக்கப்பட்டதாக நீங்கள் நினைக்கலாம் அது தான் இல்லை சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட வேண்டும் என்று 2011ம் ஆண்டே அப்போதிருந்த சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்களால் முன்னெடுக்கப்பட்டதை நீங்கள் அறிவீர்களா?. 2011ம் ஆண்டு இலங்கையில் முதலில் எட்டு சமுர்த்தி வங்கிகளை கணணி மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரண்டு சமுர்த்தி வங்கிகளை கணணி மயமாக்கும் பணிகளில் செயற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன. இதற்கமைய கல்லடி சமுர்த்தி வங்கியும், புளியந்தீவு சமுர்த்தி வங்கியும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வட கிழக்கு மற்றும் மலையகத்திற்கு வாழ்வாதார பணிப்பாளராக செயற்பட்ட மா.நடேசராஜா அவர்களின் மேற்பார்வையல் இடம் பெற்று வந்தன. இக்கால கட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் K.கணேசமூர்த்தி அவர்கள் சமுர்த்தி தலைமையாக முகாமையாளராகவும், கல்லடி சமுர்த்தி வங்கிக்கு முகாமையாளராக K.தங்கத்துரை அவர்களும், புளியந்தீவு சமுர்த்தி வங்கிக்கு முகாமையாளராக K.நவரஞ்சன் அவர்களும் கடமையாற்றி வந்தனர்.
நான் அப்போதைய காலகட்டத்தில் கல்லடி வேலூர் கிராமத்தில் கடமையாற்றி வந்த காரனத்தால் அக்கிராமத்தின் பங்கு, அங்கத்தவர், குழு, சிறுவர், திரியமாதா கணக்குகளின் விபரங்களை சேகரித்து வங்கியில் கணணியில் பதிவேற்றம் செய்ய உதவி செய்தேன். சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயத்தினை மேற் கொண்டு கல்லடி சமுர்த்தி வங்கியை பார்வையிட்டார். இதன் போது வட கிழக்கு மற்றும் மலையக வாழ்வாதார பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும், மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்னம் அவர்களும், மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளராக K.நவரஞ்சன் அவர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களான திரு.ரவீந்திரகுமார், திரு.சிறிதரன், திரு.சிறிகரன், திரு.சிவாகரன் ஆகியோரும் இக்கணணி மயமாக்கலை மேற்பார்வை செய்த சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.சுகுமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இவ்விரு வங்கிகளும் கணணி மயமாக்கல் பணிகளில் மிக மும்முரமாக செயற்பட்டு வந்தது. வங்கி உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் தங்கள் அர்ப்பணிப்பான சேவையை வழங்கி வந்தனர்.
தொடரும்.......
Comments
Post a Comment