2021ம் ஆண்டிற்கான இறுதி சௌபாக்கியவாரம் 15.12.2021 தொடக்கம் 21.12.2021 வரை....
சமுர்த்தி திணைக்களத்தால் 2021ம் ஆண்டிற்கான 4வது சமுர்த்தி சௌபாக்கிய வாரம் எதிர்வரும் 15.12.2021 தொடக்கம் 21.12.2021 வரை நாடுபூராவும் நடைபெறவுள்ளது.
சமுர்த்தி திட்டத்தின் ஊடாக சௌபாக்கிய வீட்டுத்திட்டங்கள், திரிபியச வீடுத்திட்டங்கள், சமுர்த்தி லொட்டறி வீடு திட்டங்கள் என வீடற்றவர்களுக்கு வீடுகளை புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகளை சமுர்த்தி பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வுகளும் 200000 சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்த சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு சமுர்த்தி பயனாளிகளுக்கு அவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்த பல உதவிகள் இவ்வாரங்களிலும் இடம்பெறவுள்ளன.
இத்துடன் சமுர்த்தி லொட்டறியில் வீடுகள் கிடைத்த சமுர்த்தி பயனுகரிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும், புதிய சமுர்த்தி லொட்டறி வீட்டுத்திட்டங்களுக்கு வீடுகளை நிர்மானிக்க ஆரம்ப கட்ட வேலைகளையும் இவ்வாரத்தில் செயற்படுத்தவுள்ளதாக அறியப்படுகின்றது.
Comments
Post a Comment