வீட்டுத் தோட்டத்தை மேம்படுத்துவதற்காக கோழிகுஞ்சுகள் வழங்கி வைப்பு....

 வீட்டுத் தோட்டத்தை மேம்படுத்துவதற்காக கோழிகுஞ்சுகள் வழங்கி வைப்பு....



சமுர்த்தி பயனுகரிகளின் மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அன்மையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி பயனுகரிகளுக்கான கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டதுடன் கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி பட்டறையும் இடம் பெற்றது.

  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.P.M.ருமைஷ்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் M.A.C.ரமீசா அவர்களினால் அன்மையில்  சமுர்த்தி பயனாளிகளிடம் கோழிக் குஞ்சுகள் கையளிக்கப்பட்டது. இதன் பின் கோழிக்குஞ்சுகள் பெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கு எவ்வாறு கோழிக்குஞ்சுக்களை பராமரிப்பது என்பது பற்றி கால்நடை திணைக்கள உத்தியோகத்தர்களினால் பயிற்சி பட்டறை அடம் பெற்றது. இந்நிகழ்வில்   சமுர்த்தி பயனாளிகள்  மற்றும் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





Comments