சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் கையளிப்பு.....

 சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் கையளிப்பு.....

வறிய மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது சமுர்த்தி திணைக்களத்தின் பாரிய பணியாகும். இதன் அடிப்படையில் நாடு பூராவும் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக வீடுகள் அமைத்துக் கொடுப்படுகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலும் 2021ம் ஆண்டிற்கான சமுர்த்தி செளபாக்கியா வீடுகளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் M.A.C.ரமீசா அவர்களினால் அன்மையில்  சமுர்த்தி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில்  சமுர்த்தி தலைமை முகாமையாளர் S.P.M.ருமைஷ் மற்றும் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.









Comments