மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.....

 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.....


மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றுச் செல்கின்றார்கள். இவர்களுக்கான இறுதி பிரியாவிடை நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வாசுதேவன் தலைமையில் 18.10.2021 அன்று டேபா மண்டபதில் நடைபெற்றது.

சமுர்த்தி திட்டம் ஆரம்பகாலங்களில் இருந்து சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றி பிற்காலங்களில் கருத்திட்ட முகாமையாளராகவும், தலைமையக முகாமையாளராகவும் வெல்லாவெளி, வவுணதீவு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றிய  தம்பிராசா சத்தியசீலன் அவர்கள் 21.10.2021 முதல் தன் கடமையில் இருந்த ஓய்வு பெறுகின்றார். சிறந்த சேவையாளனாக செயற்பட்ட இவர் இனி வரும் காலங்களில் தன் குடும்பத்தாருடன் இனிதாக தன் நாட்களை நகர்த்த வாழ்த்துகின்றோம்.

சமுர்த்தி திட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக தன்னை இணைத்துக் கொண்டு களத்தில் பணியாற்றியதுடன் பின்னர் சமுர்த்தி வங்கியில் பணியாற்றி தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றிய ஜெயதேவி சிவகுமார் அவர்கள் 18.10.2021 முதல் தன் கடமையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் மக்களுக்கான அளப்பரிய சேவையாற்றி இவர் இனி வரும் காலங்களில் தன் குடும்பத்துடன் இனைந்து தன் வாழ் நாட்களை கடக்க நாமும் வாழ்த்துகின்றோம்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயளாலர் திரு.அருணன் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் அவர்களும் சமுர்த்தி கருத்திதிட்ட முகாமையாளர் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













Comments