சமுர்த்தி மீளாய்வு கூட்டம் ......
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி மீளாய்வுக் கூட்டம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 13.10.2021 அன்று நடைபெறற்றது. இக் கூட்டத்திற்கு 14 பிரதேச செயலகங்களில் இருந்தும் தலைமையக முகாமையாளர்கள், கருத்திட்ட முகாமையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இக் கூட்டத்தில் 200000 குடும்பங்களை மேற்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதன் மீளாய்வுகள் பரிசீலிக்கப்பட்டதுடன் இதன் அடுத்த கட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மற்றும் மணைப்பொருளாதார வேலைத்திட்டத்தில் வீட்டுத்தோட்டத்திற்கான பயிர் விதைகள் வழங்குதல், பழ மரங்கள் வழங்குதல், தென்னங்கன்றுகள் வழங்குதல், கோழி குஞ்சுகள் வழங்குதல் பற்றியும் விரிவாக பரிசீலிக்கப்பட்டதுடன் அதன் முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதே வேளை சௌபாக்கியா வீட்டுத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் அதன் முன்னேற்றமும் பார்வையிடப்பட்டது. அக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் S.M.பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் G.F.மனோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவிற்கான முகாமையாளர் திருமதி.நி.கிரிதரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M.அலி அக்பர் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment