சமுர்த்தி பயனாளிகளுக்கு கால்நடை திணைக்களத்தால் பயிற்சிநெறி....

 சமுர்த்தி பயனாளிகளுக்கு கால்நடை திணைக்களத்தால் பயிற்சிநெறி....


மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சமுர்த்தி பயனாளிகளின் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காக   மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமங்களுக்கு நேற்றைய தினம் கோழிக் குஞ்சுகள்  வழங்கி வைக்கப்பட்டன.  

கோழி வளர்ப்பு பற்றிய கருத்தரங்கு  மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்ணகௌரி டினேஸ் அவர்களின் தலைமையில் 12.10.2021 அன்று  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

சமுர்த்தி பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட கோழிக்குஞ்சுக்களை எவ்வாறு பராமிப்பது இதற்கு ஏற்படும் நோய்தாக்கம் பற்றிய விபரங்களும் விரிவாக கலந்துரையாடல் மூலம் பயிற்சி நடைபெற்றது. மணைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் விவசாய திணைக்களமும் உள்வாங்கப்பட்டமையால் அவர்களின் பங்களிப்பு இச்செயற்பாட்டில் முக்கியமாகதாக காணப்பட்டது.

மண்முனை  தென் மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  அ.குககுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கொக்காட்டிசோலை பிரதேச கால்நடை திணைக்களத்தால் பயிற்சி நெறி நடாத்தப்பட்டது  மற்றும் இந்நிகழ்வில் சமுர்த்தி  கருத்திட்ட முகாமையாளர் அவர்களும், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















Comments