நானும் என் சமுர்த்தியும் 75ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 75ம் தொடர்.......





கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாக ஒன்பது சமுர்த்தி சங்கங்களும் ஏற்பாடு செய்து நடாத்தி இருந்தது. ஒவ்வொரு சமுர்த்தி சங்கமும் சிறி சக்தி வித்தியாலத்துடன் இணைந்து ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் நடாத்தி வந்தது.

ஒவ்வொரு சமுர்த்தி சங்கங்களும் தங்கள் குடும்பம் சகிதம் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

ஒக்டோபர் மாதம் முதல் தினமே சிறுவர் முதியோர் தினமாக ஆரம்பமானது இந்நாளில் சிறி சக்தி வித்தியாலயம் சிறுவர்கள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பாடசாலையில் இருந்து உள் வீதி வழியாக ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்து இருந்தது. இதற்கு பாடசாலை அதிபர் T.அருட்சோதி அம்மணி அவர்கள் வழி நடத்தி இருந்தார் கல்லடி வேலூர் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் என்கின்ற ரீதியில் நானும் அழைப்பட்டிருந்தேன் சிறப்பான ஒரு செயற்பாடாக இருந்தது.

 

இதே நேரம் 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு விசேட புலமை பரிசில் ஒன்றை வழங்குவதற்காக செலிங்கோ நிறுவனம் மாணவர்களை பதிவு செய்து அவர்களை செலிங்கோ நிறுவனத்தில் அங்கத்தவராக்கும் பணிகளும் இடம்பெற்றன.  


இதே நேரத்தில் ஆசிரியர் தினம் வந்தேற எமது சக்தி வித்தியாலய மாணாக்கர்கள் தங்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அரங்கேறிய ஆசிரியர்களை மிகவும் அழகான முறையில் மாணவர்கள் கௌரவித்தார்கள் இவ்வாறே 10ம் மாதம் நகர்ந்து கொண்டிருந்தது.

தொடரும்.......



Comments