நானும் என் சமுர்த்தியும் 74ம் தொடர்.......
2011ம் ஆண்டிற்கான புலமை பரீட்சையும் நடைபெற தயாராக இருந்தது. இம்முறையும் எம் சிறார்களுக்கு நாமே உதவுவோம் என நினைத்துக் கொண்டு 2011ம் ஆண்டு இரண்டாவது தடவையாக 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள வறிய மாணவர்களை இனங்கண்டு இலவச கருத்தரங்கை நடாத்த தீர்மானித்தோம். இவ்வருடமும் செலிங்கோ நிறுவனத்திடம் அனுசரனையை கோரினோம் அவர்களும் மனமுவர்ந்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.
வழமை போன்று தாய் சங்கத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் 15.08.2011 அன்று இலவச கருத்தரங்கை ஏற்பாடு செய்தோம். நிகழ்வின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இதன் போது கருத்து தெரிவித்த பிரதிப்பணிப்பாளர் அவர்கள் கல்லடி வேலூர் கிராமத்தில் இப்படியான சிறந்த வேலைத்திட்டங்கள் நடைபெறுவது பாராட்டத்தக்க விடமாகும் இதற்காக உழைக்கும் சமுர்த்தி தாய் சங்கம் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டு இச் செயற்பாடு இனி வரும் காலங்களில் தொடரப்பட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிப்பணிப்பாளர் N.சிதம்பரமூர்த்தி அவர்களும், ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T..அருட்சோதி அவர்களும், கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும் மட்டக்களப்பு செலிங்கோ நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் இன்றைய நாளின் விரிவுரையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கில் சுமார் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர் ஒரு நாள் கருத்தரங்காக இது இடம்பெற்றது. இந்நிகழ்வுகள் யாவும் கல்லடி வேலூர் சமுர்த்தி தாய்ச்சங்க தலைவி ம.தங்கேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடமாகும்.
இதன் போது குடிசையில் வாழ்வோரை கல் வீட்டில் குடியமர்த்துவோம் எனும் வேலைத்திட்டத்தில் கல்லடி வேலூர் கிராமத்தில் ஒரு குடும்பத்திற்கு திரியபியச வீடு வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதன் போது துர்க்கா சமுர்த்தி சங்கத்தில் உள்ள ஒரு சமுர்த்தி பயனுகரியான ஹம்சலா இலங்கேஸ்வரன் அவர்கள் வீடு அமைத்துக் கொடுப்பதற்கான முன்கொடுப்பணவு வழங்கப்பட்டு அத்திவாரத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிகழ்வில் கல்லடிவேலூர் சமுர்த்தி தாய்சங்கத்தின் தலைவி ம.தங்கேஸ்வரி அவர்களும் பொருளாளர் சி.இராஜேஸ்வரி அவர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
தொடரும்..........
Comments
Post a Comment