மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டது......
நாடுபூராகவும் உள்ள சமுர்த்தி வங்கிகளை கணணி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருந்த போதிலும் கொவிட் தொற்றுக்காரணமாக அப்பணிகள் சற்று தளர்வடைந்து சென்றாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 சமுர்த்தி வங்கிகள் 11.10.2021 முதல் கணணி மயமாக்கப்பட்டு செயற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதிஅ.பாக்கியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 29 சமுர்த்தி வங்கிகள் செயற்படுவதாகவும் அதில் இன்றுடன் கரடியநாறு சமுர்த்தி வங்கி கணணி மயமாக்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 27 சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் இரண்டு சமுர்த்தி வங்கிகளும் மிக விரைவில் முடிவுறுத்தப்பட்டு மாவட்டத்தில் சகல சமுர்த்தி வங்கிகளும் இயங்கும் என தெரிவித்தார். இக்கணணி மயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு கரடியநாறு வங்கியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சமுர்த்தி திணைக்களத்தில் இருந்து பல ஆலோசனைகளை வழங்கிய தொழில் நுட்ப உத்தியோகத்தரான திரு.பவளேந்திரன் அவர்களுக்கும், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுகளுக்கு பொறுப்பான திருமதி.நி.கிரிதரன் அவர்களுக்கும், மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களுக்கும், மாவட்ட சமுர்த்தி கண்காணிப்பு முகாமையாளர் N.விஸ்வலிங்கம் அவர்களுக்கும், ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் S.இராசலிங்கம் அவர்களுக்கும், கரடியநாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர், வங்கி ஊழியர்கள், கள உத்தியோகத்தர்களும் நன்றிளை தெரிவித்துக் கொள்வதாகவும், விசேடமாக கரடியநாறு வங்கியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தொழில் நுட்ப A+ உத்தியோகத்தர்களான செல்லையா நவரெட்னம், அவர்களுக்கும் சாமித்தம்பி தேவராஜா அவர்களுக்கும், இளையதம்பி கிருபாகரன் அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதாக தெரிவித்தார்.
Comments
Post a Comment