சௌபாக்கியா வார இறுதி நாள் நிகழ்வுகள்.....
சௌபாக்கியா வார இறுதி நாள் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமுர்த்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதன் ஒரு கட்டமாக மண்முனை பற்று பிரதேச செயலாளர் S.சச்சிதானந்தி தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அ.பாக்கியராஜா அவர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
இதன் போது வீட்டு மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சமுர்த்தி பயனுகரிகளுக்கான கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டதுடன், சேதன பசளை உற்பத்தி பற்றி விரிவான செயல் முறை செய்து காட்டப்பட்டது.
2021.09.23 தொடக்கம் 2021.09.30 வரை நாடுபூராவும் இவ் க்கியா வார நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment