களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வார வேலைத்திட்டம்.....
(உதயசுதன்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2021 செப்டம்பர் 23 தொடக்கம் செப்டம்பர் 30ம் திகதி வரை செயற்படுத்தப்படும் சௌபாக்கியா சமுர்த்தி வாரம் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகள் அனைத்தும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன் போது சமுர்த்தி லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட சீனித்தம்பி சுகிதரன் (களுவாஞ்சிகுடி வடக்கு 2021 -மார்ச்), வையிரமுத்து கோபாலப்பிள்ளை (குருக்கள்மடம் தெற்கு 2021 -ஏப்ரல்), சத்துருக்கன் குலசேகரம் (செட்டிபாளையம் வடக்கு 2021 -மே) ஆகிய பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மற்றுமொரு நிகழ்வான இரண்டு லட்சம் சமுர்த்தி குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், லொத்தர் வீடுகளுக்கான அடிக்கல்லும் நடப்பட்டதுடன் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான செபாக்கியா வீட்டிற்கான அடிக்கல்லும் நடப்பட்டது.
இந் நிகழ்வுகளில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கணக்காளர் S.விக்னராஜா அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் அவர்களும், சமுர்த்தி முகாமைத்துப் பணிப்பாளர் K..உதயகுமார், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி.தமிழ்வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த வாரத்தினுள் பல்வேறு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் நிறைவடைந்த திட்டங்களும் பயனாளிகளிடம் கையளிக்கப்பவுள்ளன.
சகலரும் சுகாதார முறையை கடைப்பிடித்து நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment