மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சௌபாக்கியா வாரம் பற்றிய ஒரு கண்னோட்டம்.....

 மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சௌபாக்கியா வாரம் பற்றிய ஒரு கண்னோட்டம்.....

 நாடுபூராவும் சமுர்த்தி திணைக்களத்தால் சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை 23.09.2021 தொடக்கம் 30.09.2021 ஆகிய காலங்களில் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்சௌபாக்கியா வேலைத்திட்டங்கள் 14 பிரதேச செயலங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இவ்வேலைத்திட்டத்தில் சமுர்த்தி பயனாளிகளுக்கு  பல உதவி திட்டங்கள் வழங்கப்பட்டதுடன் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகளும், வீட்டு மனை பொருளாதாரத்தை மேம்படுத்தவதற்கான உதவிகளும் வழங்கப்பட்டன. இதன் அடிப்படையில் சமுர்த்தி பயனுகரிகளுக்கு ஓலை வீட்டினை கல் வீடாக்குவோம்  எனும் செயற் திட்டத்தின் ஊடாக சௌபாக்கியா பத்துலட்சம் வீடுகள், சௌபாக்கியா இரண்டு லட்சம் வீடுகள், திரியபியவீடுகள், லொட்டறி வீடுகள் என பல வீடுகள் சமுர்த்தி பயானிகளிடம் இவ் சௌபாக்கியா வாரத்தில் கையளித்து வைக்கப்பட்டதுடன்.  வீட்டு லோட்டரி கிடைத்த சமுர்த்தி பயனாளிகளுக்கு காசோலைகளும் வழங்கப்ட்டன. அத்துடன் கழிவறைகள் இல்லாதோருக்காக புதிய கழிவறைகள் அமைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதுடன், புதிய வீடுகளுக்கான அடிகல்லும் நடப்பட்டன.

தம் வாழ்வாதாரத்தை தாமே உயர்த்த வேண்டும் எனும் சமுர்த்தி திட்டத்தின் தார்மீக கோட்பாட்டின் அடிப்படையில் வீட்டிற்கு ஒரு வீட்டுத்தோட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான பயிர் விதைகள், கோழி குஞ்சுகள், தென்னங்கன்றுகள் இவ் சௌபாக்கியா வாரத்தில வழங்கப்பட்டதுடன் சேதன பசளை உற்பத்தி பற்றிய அறிவூட்டல்களும் இடம் பெற்றன.

அத்துடன் இது வரை காலமும் நேரடியாக சமுர்த்தி வங்கியின் ஊடாக கடன் பெற்று வந்த சமுர்த்தி பயனாளிகளுக்கு கிராமத்திலேயே சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக கடன் பெற்றுக் கொள்வதற்காக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கு அறனெலு கடன்கள் இவ் சௌபாக்கியா வாரத்தில் வழங்கப்பட்டன. அன்றாட நாள் வியாபார தொழில் செய்யும் சமுர்த்தி பயனாளிகள் இக்கிராம சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மூலம் இவ் அறனெலு கடன்களை பெற்றுக் கொள்ள முடியும்.

சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை எண்ணற்ற உதவிகளை சமுர்த்தி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பிரதேச செயலகங்கள் ஊடாக 23.09.2021 தொடக்கம் 30.09.2021 வரை செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்.

மண்முனை பற்று பிரதேச செயலகம்.......



மண்முனை வடக்கு பிரதேச செயலகம்...........



மண்முனை மேற்கு பிரதேச செயலகம்......
கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம்.......



ஏறாவூர் நகர் பிரதேச செயலகம்.....
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம்.......




காத்தான்குடி பிரதேச செயலகம்.....
மண்முனை தென் மேற்கு - பட்டிப்பளை பிரதேச செயலகம்.......



 
கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம்....... 
போரதீவு-பற்று வெல்லாவெளி பிரதேச செயலகம்....... 















Comments