நானும் என் சமுர்த்தியும் 71ம் தொடர்.......
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இப்படியாக கொடிவாரம் நிகழ மண்முனை பற்று பிரதேச செயலகத்திலும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம் தலைமையில் கொடி விற்பனை ஆரம்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலாளர் K.தனபால் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு முதல் கொடியினை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது கடந்த வருடம் அதிக சேமிப்பை செய்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கௌரவிக்கபட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
23.06.2011 அன்று நடேசராஜா சேருடன் தொடர்பு கொண்டு சேர் சரியா என்று கேட்டேன். அதற்கு அவர் தாங்கள் தற்போது அம்பாறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக கூறினார். நான் எல்லா ஒழுங்கும் சரி என்று கூறி தொடர்பை தூண்டித்தேன். ஆட்டோக்களுக்கான காப்புறுதி செய்வதற்கான பணியை உரிய உரிய பயனாளியையே கவணித்துக் கொள்ளுமாறும் கூறினேன். மண்டப ஒழுங்குகளை பார்வையிட்டேன் எல்லாம் சரி நாளை நிகழ்வு என்று சென்று விட்டேன்.
24.06.2011 வெள்ளிக்கிழமை காலையில் அலுவலகத்தில் ஒப்பமிட்டு மண்டபத்திற்கு சென்று பணிகளை பார்வையிட்டேன் எல்லாம் முடிவாகி இருந்தது எல்லாம் சரி பிற்பகல் 2.00 மணிக்கு நிகழ்வு நான் தாய்சங்க உறுப்பினர்களை 1.00 மணிக்கு முதல் தயாராகச் சொன்னேன். நான் 12 மணிக்கெல்லாம் மண்டபத்திற்கு சென்றேன் ஒவ்வொருவராக வந்தனர் மண்டபம் நிரம்பி வழிந்தது. எனது இந்த நிகழ்வுக்கு அமலன் மோட்டஸ் அவர்கள் அனுசரனை வழங்கி இருந்தார் அவரும் வந்திருந்தார். மட்டக்களப்பு செலிங்கோ நிறுவனத்தின் அப்போதைய முகாமையாளர் அ.சாந்தகுமார் அவர்களும் வருகை தந்திருந்தார். மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும், மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், தலைமைய முகாமையாளர், முகாமையாளர்கள் என பலரும் வந்து விட்டனர். எனக்கு மனதில் ஒரே பதற்றம் நடேசராஜா சேரையும் காணவில்லை தொலைபேசியில் தொடர்பும் கொள்ளவும் முடியவில்லை. அப்போது பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும் அவ்விடம் வந்து விட அதே சமயம் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் அவர்களும் வருகை தந்து விட்டார்கள் எல்லாம் சரி அதீதியை காணவில்லை. பிரதேச செயலாளர் என்னை பார்த்து நிகழ்ச்சியை ஆரம்பிப்போமா என கேட்டார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அழுகையாகவும் கோபமுமாகவும் இருந்தது அப்போது தான் நடேசராஜா சேரிடம் இருந்து ஒரு அழைப்பு என் கைபேசிக்கு வந்தது நிகழ்வுக்கு பணிப்பாளர்நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள் வந்தாரா? இல்லையா? அடுத்த தொடரில் பார்ப்போம்......
தொடரும்.......
Comments
Post a Comment