நாடுபூராவும் 2021.09.23 தொடக்கம் 2021.09.30 வரை சமுர்த்தி செளபாக்கியா வேலைத்திட்டங்கள்.......

 நாடுபூராவும் 2021.09.23 தொடக்கம் 2021.09.30 வரை சமுர்த்தி செளபாக்கியா வேலைத்திட்டங்கள்.......

(A.L.ஐயூப்கான்)

நாடுபூராவும் 2021.09.23 தொடக்கம் 2021.09.30 வரை சமுர்த்தி செளபாக்கியா வாரத்தை நடைமுறைபடுத்துமாறு சமுர்த்தி திணைக்களம் அறிவுருத்தி உள்ளது. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் இந்த சௌபாக்கியா வார வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 அந்த வகையில்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முடிவுறுத்தப்பட்ட சௌபாக்கியா வீடுகள், திரியபியச வீடுகள், லொட்டரி வீடுகள் மற்றும் முடிவுற்ற மலசல கூடங்களை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டதுடன், வீடுகள் நிர்மானிப்பிற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.   இந்நிகழ்வுகளில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா.M.A.C.ரமீசா அவர்களும், சமுர்த்தி  கருத்திட்ட முகாமையாளர் A.L.M.சரீப் அவர்களும், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் அவர்களும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் A.C.சாதிக்கீன் மற்றும் C.M.S. இஸ்மாயில் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.











Comments