மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு கொரனாவால் முடக்கம்.....
மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் 15 பணியாளர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டதால் மாவட்ட சமுர்த்தி காரியாலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
நேற்றைய தினம் 05.08.2021 அன்று புளியந்தீவு பொது சுகாதார பரிசோதகர் காரியாலத்தில் எழுமாறாக 111 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தில் கடமையாற்றும் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது இதில் 15 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டதுடன் புளியந்தீவு பகுதியிலும் 20 பேருக்கும் தொற்றுதி கண்டறியப்பட்டது. 111 பேருக்கான அன்டிஜன் பரிசோதனையில் 35 கண்டறியப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதே வேளை வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாத காரணத்தினால் தொற்று கண்டறியப்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment