நானும் என் சமுர்த்தியும் 70ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 70ம் தொடர்.......

 மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பிரதிப்பணிப்பாளராக மீண்டும் P.குணரெட்ணம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதான செய்தி வந்தது. யார் பொறுப்பெற்றால் என்ன நமது பணியை நாம் செய்வோம் என எண்ணியவனாக என் பணியைத் தொடர்ந்தேன்.

 2011 மே-31 வந்தது நாடுபூராவும் புகைத்தல் எதிர்ப்பு கொடிதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாம் வழமை போன்று ஸ்ரீ சக்தி வித்தியாலயத்துடன் இனைந்து எதிர்ப்பு பேரணியை அதிபர் T.அருட்சோதியின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்தோம். வழமை போன்று பாடசாலையில் ஆரம்பித்த பேரணி சரவண வீதியூடாக சென்று மணிக்கூட்டு கோபுரத்தை அடைந்தது அப்போது அவ்விடத்திற்கு மாவட்ட பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும். மாவட்ட சமுர்த்தி ஒருங்கணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும் கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்தரை ஆகியோர் வருகை தந்திருந்தனர் அவர்களுக்கு எங்கள் சமுர்த்தி சங்க தாய்மார்கள் கொடியினை வழங்கி வைத்தனர். மீண்டும் பேரணி கல்லடி சமுர்த்தி வங்கிக்கு சென்று அங்கு புகைத்தல் பற்றிய சிறிய சொற்பொழிவுடன் அன்றைய தினம் முடிவுக்கு வந்தது.


 எனது மக்கள் வீட வீடாக, வீதி வீதியாக சென்று உண்டியல் சேமிப்பில் ஈடுபட்டனர் சேமிக்கும் உண்டியல்களை வங்கியில் ஒப்படைத்தும் வந்தோம். சேமிப்பு வாரம் முடிவுக்கு வந்தது, அன்றைய தினம் வங்கியில் உண்டியல்களை உடைத்து சேமிப்பு எண்ணப்பட்டது எனக்கு நிச்சயம் தெரியும் கல்லடி வேலூர் கிராமம் ஒரு லட்சத்திற்கு மேல் சேர்க்கும் என்று அதே போல் நாங்கள் ஒருலட்சத்தி இருபதாயிரம் ரூபாய் சேமித்து வலயத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டோம். பிரதேச செயலகத்தில் முதலிடத்தை பெற வேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. எனது முகாமையாளரிடம் நாம் கடைசியாக சேமிப்பு விபரத்தை பிரதேச செயலதக்கிற்கு அனுப்புவோம் என கூறினேன். அதற்கிடையில் ஒரு சில நெருங்கிய நண்பர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு என் சேமிப்பை கேட்டனர் நான் கூறவில்லை. அப்போது நான் வங்கியில் நின்ற போது  பிரதேச செயலகத்தில் இருந்து தலைமையக முகாமையாளர் தொடர்பு கொண்டு விபரத்தை உடன் அனுப்புமாறு வற்புறுத்தினார். சகல வலயமும் அனுப்பி விட்டதாக கூறினார். காலை 10 மணிக்கு நான் தான் முதலிடம் என பரபரப்பாக இருந்தது மதியம் 12 மணிக்கு நான் இரண்டாமிடம் என அறிவிக்கப்பட்டது.  அன்றே நான் புரிந்து கொண்டேன் என்னை சுற்றி ஒரு பெரிய வட்டம் போடப்படுகின்றது என்று.

நாம் கஸ்டப்பட்டு சேமித்ததை எல்லாம் கூறினோம் எதுவும் பயனில்லை என்னிலேயே எனக்கு கோபம் வந்தது இப்படி எல்லாம் கஸ்டப்பட்டு சேமிக்க வேண்டமா? என்றெல்லாம் யோசித்தேன். இப்படி கஸ்டப்பட்டு வேலை செய்பவர்களுக்கு இப்படியா கிடைக்கும் என்று கவலைப்பட்டேன். எனது மக்கள் எனக்காக கஸ்டப்பட்டும் கடைசியில் அது நடக்கவில்லை. பரவாயில்லை எனக்கு இத தேவையில்லை என் மக்களுக்கான பணியை செய்வோம் என முடிவெடுத்து எனது அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தேன். இது தான் நான் என் வாழ நாளில் பெற்றுக் கொண்ட  முதல் அடி. அது இன்னும் தொடர்ந்தன அடுத்த தொடரில் பார்ப்போம்......

தொடரும்......













Comments