நானும் என் சமுர்த்தியும் 69ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 69ம் தொடர்.......

நிகழ்வுக்கான திகதியை யாருக்கும் சத்தமிடாமல் தெரிவு செய்து கொண்டோம். 24.06.2010 அன்று காலையில் அம்பாறைக்கு பணிப்பாளர் நாயகம் வருவார், மதியம் இங்கு வந்து விடுவார் அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னார் நடேசராஜா சேர். எனது கற்பனை பெரிய அளவில் சிந்தித்தது மண்டபத்தை அழகாக அலங்கரிக்க வேண்டும், தாய்சங்க உறுப்பினர்கள் ஒரே சீருடையில் இருக்க வேண்டும், மல்டி மீடியா வைத்து கிராமத்தின் சாதனைளை வெளியிட வேண்டும், எனது கிராம மக்கள் அவரின் கைகளால் கௌரவிக்க வேண்டும், ஒரு கையேட்டை அவரின் கையால் வெளியிட வேண்டும் இன்னும் என்ன செய்யலாம் என எண்ணிய போது அப்போது மகுடக்கடன் மூலம் 250000/= கடன் சமுர்த்தி பயனுகரிகளுக்க வழங்க அங்கீகாரம் கிடைத்திருந்தது. எனவே 10 சமுர்த்தி பயனுகரிகளுக்கு ஆட்டோ எடுத்து கொடுத்தால் என்ன இது ஒரு பாரிய நிகழ்வாக இருக்குமே என எண்ணினேன்.  முகாமையாளரிடம் தெரிவித்த போது இது கஸ்டம் என்றார். உடனடியாக நடேசராஜா சேருடன் தொடர்பு கொண்டு கேட்டேன் அவர் கூறினார் தற்போது ஆட்டோவின் விலை என்ன என்று கேட்டார். என்று நான் கூறினேன் 350000/= என்றேன். அப்போது அவர் கேட்டார் உன் கிராம சமுர்த்தி பயனுகரிகள் 100000/= ரூபாவை வங்கியில் இடுவார்களா? என்று  கேட்டார். நான் சொன்னேன் கேட்டு சொல்கிறேன் என்றேன். 

 அதற்கு அவர் கூறினார் அவர்கள் சரி என்றால் அவர்களை அத்தொகையை சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்டு விட்டு, ஆட்டோவை வங்கியின் பெயரில் எழுதி விட்டு கடணை விடுவிக்கவும், கடன் முடிந்தவுடன் ஆட்டோவின் பதிவை அவர்களின் பெயருக்கு மாற்றி விடு என்றார். முகாமையாளரிடம் கூறினேன் இது சரி என்றால் சரி என்றார். இதனால் நான் பல சிக்கல்களையும் பின் நாட்களில் அனுபவித்தேன். கிராமத்தில் இது பற்றி கேட்ட போது ஆறு பேர் 100000/= ரூபாவை வைப்பிலிடுவதாக கூறினார்கள். முகாமையாளரிடம் இதை தெரிவித்து அதற்கான பணிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மே மாத இறுதிக்குள் வந்தோம். விபுலானந்தா பாடசாலையில் மண்டப ஒழுங்கும் செய்யப்பட்டது. கையேடு தயாரிப்பதற்கான பணிகளை தொடங்கினேன் கல்லடி வேலூர் கிராமம் அப்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்டத்தில் உச்சத்தில் இருந்ததால் உச்சம் என பெயரிட்டு வெளியிட எண்ணினேன். அப்போது உச்சம் கைநூலுக்கு வாழ்த்து செய்திகளை பிரதேச செயலாளர். பிரதிப்பணிப்பாளர் போன்றோரிடமம்  பெற்றுக் கொண்டேன். நினைவு சின்னங்களை தயார் செய்தேன். ஆட்டோ பெறுபவர்களின் பெயரை தயார் செய்து ஆட்டோ கம்பணியிடம் சமர்பித்து விட்டேன். மும்முரமாக பணிகள் நடைபெற்றன.

 மறுபுறம் புகைத்தல் சேமிப்பிற்கான உண்டியல்களை தயார் செய்து ஆயத்தப்படுத்தினேன். ஒவ்வொரு சங்கமும் 03 உண்டியல்கள் 04 உண்டியல்கள் என தயார் 21 உண்டியல்கள் தயார் செய்து கொண்டேன். அனைத்தையும் எடுத்தக் கொண்டு முகாமையாளரின் ஒப்பங்களை பெற்றுக் கொண்டு தயாராக இருந்தேன் அப்போது தான் அந்த செய்தி என் காதுகளுக்கு எட்டியது.... 

தொடரும்....


Comments