நானும் என் சமுர்த்தியும் 67ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 67ம் தொடர்.......

பிரதேச செயலக மட்டத்தில் யார் முதலிடத்தை பெறுவார்கள் என்று என்னால் ஊகிக்க முடியாமல் இருந்தது. கடந்த வருடம் 9,31,000 சேமித்து இ
ருந்தேன், இந்த வருடம் 5,56,700 மாத்திரமே சேமித்து இருந்தேன், நிச்சயமாக நாம வர மாட்டம் என என் மனம் சொல்லியபடியே இருந்தது. புதிதாக பதவியேற்ற தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களுக்கு இது முதலாவது சித்திரை புதுவருட சேமிப்பு. வாராந்த கூட்டத்திற்கு தயாரானோம் நான்கு முகாமையாளர்களும் இருக்க பிரதேச செயலாளர் முன்னிலையில் சேமிப்பு அறிவிக்கப்பட்டது. பிரதேச செயலகம் மட்டத்தில் அதி கூடிய சேமிப்பை செய்த கிராமமாக கல்லடிவேலூர் கிராமம் சேமித்துள்ளதாக அறிவித்தார் உண்மையில் நான் நம்பவே இல்லை மகிழ்ச்சியாக இருந்தது. இதன் போது எந்த சமுர்த்தி வங்கி முதலிடத்தை பெற்றது எனும்  தகவலை பலரிடமும் தொடர்பு கொண்டு கேட்ட போதும் சரியான தகவல் எட்டவில்லை. அதே போல் மாவட்ட மட்டத்தில் அதிக சேமிப்பு செய்த உத்தியோகத்தர் விபரமும் வங்கி விபரமும் என்னிடம் இல்லை அப்படி யாராவது தகவல் தெரிந்தால் எனக்கு அறிவிக்கவும் அதை நிச்சயமாக இணைத்தக்  கொள்வேன்.

சித்திரை கடந்த போக வைகாசி தொடங்கியது உடனடியாக சமுர்த்தி ஒன்றிய தலைவியை அழைத்து கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கமைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ம.தங்கேஸ்வரி தலைமையில் கூட்டம் ஆரம்பமானது சித்திரை புத்தாண்டில் வெற்றி பெற்றதை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தேன். எமது அடுத்த இலக்கு புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெறுவதேயாகும் என்றேன். இதற்காக ஒவ்வொரு சங்கமம் உழைக்க  வேண்டும். குறிப்பிட்ட ஒரு சில சங்கங்கள் மாத்திரம் கஸ்டப்படாமல் சகலரும் செயற்பட வேண்டும் என்றேன். ஒவ்வொரு சங்கமம் பத்தாயிரம் ரூபாவை இலக்காக கொண்டு சேமிக்க வேண்டும் எப்படியொவது சேமிக்கலாம் வீதி வீதியாக செல்லலாம் ஆனால் இருவர் மூவராக செல்ல வேண்டும் என்றேன் அனைத்து சங்கங்களும் ஒரு மித்த குரலில் சரி என்ற கூறியது. இது வரை அகில இலங்கை ரீதியாக எனக்கு ஒரு விருதும் கிடைக்கவில்லை இந்த தடவை விடவே கூடாது என முடிவெடுத்த செயற்பட்டேன்.

 

அதன் போது  புதிய முகாமையாளரை தங்கள் சங்க கூட்டத்திற்கு அழைக்கப் போவதாக அலைமகள் சங்கம் கூறியது. நானும் சித்திரை சேமிப்பிற்கான பரிசில்கள் வழங்கவுள்ளதால் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் திரு.பரமலிங்கம் அவர்களையும் அழைக்கம் படி கூறி இருந்தேன். இதன் அடிப்படையில் அவர்களை அழைத்து நிகழ்வும் நடைபெற்றது. இதன் போது முகாமையாளர் நிச்சயமாக இம்முறை நீங்கள் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் அதிகப்படியாக உங்களால் சேமிக்க முடியும் இதை மனதில் வைத்த செயற்படுமாறு கூறியதுடன் சமுர்த்தி தலைமையகத்தில் ஒரு மாற்றமும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இருந்த போதிலும் நான் முகாமையாளரிடம் யார் புதிதாக வரப்போகும் பிரதிப்பணிப்பாளர் என கேட்டேன். அவரும் எனக்க சரியாக தெரியாது ஆனால் தகவலின் படி உனக்கு தெரிந்தவர் தான் வரப்போகிறார் என்றார். எனக்கு என்னவென்றே புரிய வில்லை ஆனால் ஒன்று மட்டும் உறுதி எனக்கு மா.நடேசராஜா சேர் அவர்கள் மற்றாலாகி போவது மிகவும் கவலையாக இருந்தது யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தேன். இப்படி இருக்கும் போது ஒரு நாள் எனக்கு நடேசராஜா சேரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது நீ உடனே என் வீட்டிற்கு வா என்று கூறியவுடன் தொலைபேசியை தூண்டித்து விட்டார் நானும் புறப்பட தயாரானேன்.......

 தொடரும்......












Comments