நானும் என் சமுர்த்தியும் 66ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 66ம் தொடர்.......

கல்லடி சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை, வலய உதவியாளர் K.குமணன், மற்றும் நாங்களுமாக இணைந்து பரிசுப்பொருட்களை கொள்வணவு செய்தோம். அழைப்பிதழ் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டது. சாய முட்டி உடைத்தல், தலையணை சமர், கயிறு இழுத்தல் போட்டிகளுக்கு சிறிதரன், சிறிகரன், ரவீந்திரகுமார் ஆகியோர் வசமும், வினோத உடை போட்டி, மிட்டாய் பொறுக்குதல் போட்டிகளை கிருஸ்ணவேணி, சாரதாதேவியிடமும் ஒப்படைக்கப்பட்டது. அறிவிப்பாளராக ரவீந்திரகுமார் அவர்கள் கடமையாற்றுவார் எனவும் முடிவெடுக்ப்பட்டது. 

சித்திரை விளையாட்டு விழாவானது 28.04.2011 அன்று மதியம் 2.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும் வருகை தந்திருந்தனர். வலய வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களின் தலைமை ஆரம்பமான  இந்நிகழ்வில் போட்டிகள் மிகவும் சுவாரஸ்சியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலந்து கொண்டோருக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் 2011 சித்திரை புதுவருட சேமிப்பு காலத்தில் 1500/- மேல் சேமிப்பு செய்த சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிஸ்டலாப சீட்டிலுப்பின் மூலமும் பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தமதுரையில் வருடா வருடம் வறிய மக்கனை உற்சாகப்படுத்த சமுர்த்தி திட்டம் ஊடாக இவ் பாரம்பரிய விளையாட்டுக்களை நடாத்துவதன் மூலம் மக்கள் தம் சிந்தனைகளை சிதரடிக்காமல் வாழ வழிசமைக்க முடியும் என்றார். மாவட்ட பிரதிப்பணிப்பாளர் தமது உரையில் இன்று நாடுபூராவும் சமுர்த்தி சித்திரை விளையாட்டு விழாக்கள் ஒரே நாளில் நடைபெறுவதாகவும் நம் பாரம்பரிய விளையாட்டுக்களை நாம் மறக்க கூடாது என்பதை சமுர்த்தி அதிகார சபை மிக உன்னிப்பாக கவணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அனைவரும் பேசி முடிந்தாயிற்று நன்றியுரை மாத்திரம் தான் பாக்கியாக இருந்தது. என்னடா சித்திரை சேமிப்பின் முடிவை இவர்கள் சொல்ல மாட்டர்களா? என எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல இருந்தது. அப்போது முகாமையாளர் எழுந்து தற்போது நாம் இறுதியாக முக்கிய ஒரு கட்டத்திற்குள் வந்துள்ளோம் என்றார் 2011ம் ஆண்டிற்கான சித்திரை புதுவருடத்திற்கான சேமிப்பு முடிவுகளை தற்போது கூறலாம் என நினைக்கின்றேன் என கூறினார். உத்தியோகத்தர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி வண்ணம் இருக்க அறிவிப்பு வெளியாகியது இந்த வருடமும் கல்லடி வேலூர் கிராமம் 5,19,377 ரூபாக்களை சேமித்து வலய மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டதாக அறிவித்து சான்றிதழை வழங்க அழைத்தார்கள் எல்லையற்ற மகிழ்சியுடன் சான்றிதழை பெற்றுக் கொண்டேன். அன்றைய நாளில் எனது மக்கள் பார்க்கும் வண்ணம் சான்றிதழ் அதுவும் மா.நடேசராஜா சேர் அவர்களின் கைகளால் கிடைத்த மகிழ்ச்சியை தந்தது.

 உடனடியாக கல்லடி வேலூர் கட்டுப்பாட்ட சபையின் உறுப்பினரான தாட்சாயின் நாசருக்கு நன்றிகளை தெரிவித்தக் கொண்டு தங்கள் இந்த வருட சேமிப்பு கடந்த வருடத்தை விட நான்கு லட்சம் குறைந்துள்ளதாகவும் கடந்த வருடம் ஒன்பது லட்சம் என்றும் இந்தவருடம் ஜந்து லட்சம் எனவும் குறிப்பிட்டு தங்கள் அலைமகள் சங்கம் தான் அதி கூடிய சேமிப்பாக 1,32,000 சேமித்தள்ளதாக வாழ்த்துக்களையும் தெரிவித்து தைப்பொங்கலில் சேமித்தது போன்று இதிலும் சேமித்தள்ளதை பாராட்டினேன். மைதானத்தில் என்னை சுற்றி என் மக்கள் குவிந்து விட்டனர் அனைவருக்கும் விளையாட்டில் பரிசில்களும் கிடைத்திருந்து மூன்றாவது தடவையாக வலயமட்டத்தில் முதலிடம் பிரதேச செயலக மட்டத்தில் எப்படி இருக்குமோ தெரியாது? என மக்களிடம் கதைத்தேன் பிரதேச செயலக மட்டத்தை அடுத்த தொடரில் பார்ப்போம் புதிய சமுர்த்தி பிரதிப்பணிப்பாளரையும் அடுத்த தொடரில் பார்ப்போம்........

 தொடரும்.....


Comments