நானும் என் சமுர்த்தியும் 64ம் தொடர்......
கௌரவிப்பு...........
இதன் போது தான் மிகவும் சந்தோசமான ஒரு விடயம் இடம் பெற்றது. கௌரவிப்பு நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதாகவும் அதில் கடந்த வருடம் சிறுவர் போட்டிகளில் கலந்து கொண்டு தேசியமட்டம், மாவட்ட மட்டம், பிரதேச செயலக மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக தகவல் கிட்டியது.
எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏன் என்றால் கல்லடிவேலூர் கிராமம் சார்பாக ஒரு தேசிய மட்ட முதலிடத்தை சுதாகரன் திவ்யானி பெற்றிருந்தார் அவருக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்தை எண்ணி சந்தோசம் அடைந்தேன். அவருக்கான தகவலையும் அனுப்பி குறித்த தினத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருமாறும் கூறி இருந்தேன்.
சில நாட்களின் பின் மற்றுமொரு இன்பகரமான செய்தியும் என் காதுக்கு எட்டியது. 2010ம் ஆண்டு புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் அதிகமாக சேமித்த சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் கௌரவிக்கப்படவுள்ளதாக. நான் அறிந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடாத்தி சமுர்த்தி உத்தியோகத்தர்களை கௌரவித்தாக அறியவில்லை இது உண்மையா பார்ப்போம் என்றிருந்தேன். என் சக உத்தியோகத்தர்களுடன் உரையாடிய போது என்னடா 2011ல் அதிக சேமிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக இப்பவே உசுப்பேத்துகிறார்கள் என்றும் கூறினார்கள். நான் கூறினேன் பரவாயில்லை நடந்தால் புதிதாக வந்த தலைமையக முகாமையாளரான K.கணேசமூர்த்தி அவர்களை தான் பாராட்ட வேண்டும் என்றேன்.
குறித்த நாளும் வந்தது மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமைய முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகின. இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொண்டார். நிகழ்வுக்கு கல்லடி வலய சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்கள், புளியந்தீவு சமுர்த்தி வலய முகாமையாளர் K.நவரஞ்சன் அவர்கள், இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வலய முகாமையாளர் கீதா கணகசிங்கம் அவர்கள், இருதயபுரம் சமுர்த்தி முகாமையாளர் திருமதி.க..சுபந்தினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வு ஆரம்பமானது முதலில் சிறுவர் நிகழ்வுக்கான சான்றிதழ்களும் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டது. அடுத்ததாக 2010ல் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் அதிகமாக சேமித்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என தலைமைய முகாமையாளர் அறிவித்தார் உண்மையில் அவரை பற்றி அன்று நெகிழ்ந்து கொண்டேன். எமக்கு உரிய மரியாதை அவ்விடத்தில் வைத்து வழங்கப்பட்டது. இல்லாவிடின் எங்களது வாராந்த கூட்டத்தில் வைத்து சான்றிதழ்களை தருவார்கள் அல்லது அவ்விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் தங்களுக்க ஒரு சான்றிதழ் உண்டு என தருவார். ஆனால் இன்று எமது கிராம மாணக்கர்கள் பார்க்கும் வண்ணம் எமக்கு வழங்கப்பட்டது. உண்மையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை நான் தனிப்பட்ட முறையில் இன்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதிரடியான ஒரு மாற்றம் ஒன்று எமக்கு காத்து இருந்தது இதை நீங்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் அது என்ன மாற்றம் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்......
தொடரும்......
Comments
Post a Comment