நானும் என் சமுர்த்தியும் 63ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 63ம் தொடர்.......

2008, 2009, 2010, 2011ம் ஆண்டுகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்றுகூடல் நிகழ்வுகளில் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக காணப்பட்டது. அதில் 2009ம் ஆண்டிற்கான ஒன்றுகூடலை எங்கே நடத்தலாம் என மண்முனை வடக்கு பிரதேச செயலக பதவியணியினர் நலன்புரிச்சங்க கூட்டத்தில் பேசப்பட்டது அப்போது அந்த நிர்வாக சபையில் நானும் உறுப்பினராக இருந்தேன். பிரதேச செயலாளர் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பிரதேச செயலகத்தில் தான் நடாத்துகிறீர்கள் ஒரு மாற்றத்திற்காக வெளியிடங்களுக்கு போகலாமே என்றார். எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்தோம் போவதற்கான வசதி மற்றும் இங்கு நிகழ்வு நடத்தினாலே யாரும் வர மாட்டார்கள் என்று ஒருவருக்கொரவர் கூறினர்.

பிரதேச செயலாளர் கூறினார் நான் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன் நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார். பல இடங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டு கடைசியாக பாசிக்குடாவில் ஒரு தனியார் காணியில் நடாத்தவதாக முடிவெடுக்கப்பட்டது. ஒரு பஸ் வண்டியில் செல்வதாகவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கிராம உத்தியோகத்தர். திரு.தில்லைநாதன் அவர்களும் திரு.புண்ணியமூர்த்தி அவர்களும் நிர்வாக உத்தியோகத்தர் திரு.மைக்கல் கொலின் அவர்களும் நானும் முன்னின்று செயற்பட்டோம். ஒரு பஸ்ஸில் 56 பேர் தான் போவது என்று முடிவாகி கடைசியில் இரண்டு பஸ்களில் செல்வதற்காக தயாரானோம். அதற்குரிய காலமும் வந்தது பஸ்ஸில் ஏறியவுடனேயே ஆடல் பாடல் தான் ஒரு வருட காலம் பணி செய்து சோர்வாக இருந்த எங்களுக்கு சொல்லவா வேண்டும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் எம்முடன் இணைந்து கொண்டனர்.



போய் இறங்கியவுடன் மிகவும் அருமையான ஒரு இடமாக அவ்விடம் இருந்தது. முதலில் பிரதேச செயலாளருக்கே நாம் நன்றி கூற வேண்டும் போல இருந்தது. ஒருபுறம் சமையல் வேலைகள் நடந்தது கொண்டிருக்க  மறு புறத்தில் ஆடல் பாடல்களுக்கான ஒத்திகைகள் இடம்பெற்றன. இதன் போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார் கிரம உத்தியோகத்தர் திரு.நேசதுரை  அவர்கள்.  இதில் சில நிகழ்ச்சிகளை நடாத்தவதற்கு எனக்கும் அனுமதி கிடைத்திருந்தது. எப்போதும் சுவாரஸ்சியமாக இருக்கும் நானும் சில நிகழ்வுகளை நடாத்தி கைதட்டல் வாங்கினேன். 


இங்கு தான் ஒரு முக்கியமான செய்தியை சொல்லப்போறன். நானும், யூட்டும், சுவாம்பிள்ளையும் இணைந்து எம்.ஜீ.ஆர் பாடல்களின் தொகுப்பிற்கு நடனமாட தயாராகி வந்நிதிருந்தோம் அதை யாரிடமும் சொல்லவில்லை. அதை நடாத்தியும் காட்டி எல்லோரிடமும் கைதட்டலையும் வாங்கினோம். அதன் கானோளியை நீங்கள் மேலே கிளிக் செய்து பார்க்கலாம். எனவே அந்த இனிமையான அனுபவங்கள் என்னால் இன்றும் மறக்க முடியாது. நான் பதிவிடும் அனைத்தும் நான் தேடி வைத்திருக்கும் பொக்கிசங்கள். ...

 தொடரும்........




Comments