நானும் என் சமுர்த்தியும் 62ம் தொடர்.......
இதற்கிடையில் 2009ம் ஆண்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் சமுர்த்தி அதிகார சபையால் நடைபெற்றன இதில் நவோதய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு மரக்கன்றுகளும், மிருக வளர்ப்பிற்கென ஆடுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வானது புளியந்தீவு சமுர்த்தி வலயத்தில் இடம்பெற்றது. வலய முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும், இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் மலையக மற்றும் வடகிழக்கின் பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளையும் கால்நடைகளையும் வழங்கி வைத்தனர்.
இதே போன்று புளியந்தீவு சமுர்த்தி வங்கி 2008ம் ஆண்டு வங்கி தரப்படுத்தலில் இலங்கையில் விகிதாசார அடிப்படையில் 15 இடத்தினை பெற்றுக் கொண்டதற்காக ஒரு முன்னேற்ற மீளாய்வும் பாராட்டு கௌரவிப்பும் 2009.02.19 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு புளியந்தீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.இராசலிங்கம் அவர்கள் தலைமை தாங்க அதீதிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரெட்ணம் அவர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைய முகாமையாளர் மாலா நெடுஞ்செழியன் அவர்களும், கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வெற்றி கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்றால் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் ஒரு கெத்துத்தான். பிரதேச செயலகத்திலேயே அதிக பணியாட்களை கொண்ட ஒரு படையாகவே காணப்பட்டது. ஒளிவிழா, சரஸ்வதிபூசை, விளையாட்டு விழா, இரத்ததானம் என்றால் நாங்கள் தான் ஹீரோ எதற்கும் சளைக்க மாட்டோம். அதே போல் ஒன்று கூடல் நிகழ்வு என்டாலும் நாங்க தான். இதை அங்கு அப்போது பணியாற்றிய யாரும் மறுக்கவும் மாட்டார்கள் மறக்கவும் மாட்டார்கள். அந்த சுவாரஸ்சியமான தொடரை நாளை பார்ப்போம்......
தொடரும்........
Comments
Post a Comment