நானும் என் சமுர்த்தியும் 61ம் தொடர்......
திவிநெகும வேலைத்திட்டம்.........
திவிநெகும பத்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளின் தேசிய வேலைத்திட்டம் நாடுபூராவும் செயற்படுத்திய வண்ணம் இருந்தது இதன் போது இத்திட்டத்தில் இணைந்த கொண்ட பயனாளிகளுக்கு பயிர் விதைகள் வழங்கும் வேலைத்திட்டம் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நடைபெற்று வந்தன. கல்லடி வேலூர் கிராமத்தில் பயனுகரிகளுக்கான பயிர் விதைகளை வழங்கி வைக்க கல்லடி சமுர்த்தி வலயத்தின் K.குமணன் அவர்கள் வருகை தந்து வழங்கி வைத்திருந்தார்.இதே போல் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களிலும் பயிர் விதைகள் பயனுகரிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி ஒருங்கிணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதரன் அவர்களும், ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.கங்காதரன் அவர்களும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பயிர் விதைகளை வழங்கி வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வேலைத்திட்டத்தை ஒவ்வொரு பிரதேச செயலகமாகவும் கிராமங்களாகவும் சென்று பார்வையிட்டும், ஆரம்பித்தும் வைத்ததர் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள்.
தொடரும்......
Comments
Post a Comment