நானும் என் சமுர்த்தியும் 60ம் தொடர்......

 நானும் என் சமுர்த்தியும் 60ம் தொடர்......

நான் 2011ம் ஆண்டு தொடங்கும் போதே குறிப்பிட்டிருந்தேன்  இவ்வாண்டு திவிநெகும - வாழ்வின் எழுச்சி வேலைத்திட்ட ஆண்டாக செயற்படவுள்ளதாக அதற்கமைய திவிநெகும வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.


முதல் கட்டமாக உத்தியோகத்தர்களின் வீடுகளில் வீட்டுத்தோட்ட வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. மஹிந்த சிந்தனை மூலம் திவிநெகும  பத்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளின் தேசிய வேலைத்திட்டம் 12.03.2011 அன்று ஆரம்பிக்கப்பட இருந்த போதிலும் இவ்வேலைத்திட்டத்தில் சகல அரச உத்தியோகத்தர்களும் தங்கள் வீடுகளிலும் வீட்டுத் தோட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் முதல் கட்டமாக 07.03.2011 அன்று கல்லடி வேலூர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான எனது இல்லத்தில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள் கலந்து கொண்டு மரங்கள் நாடப்பட்டது விசேட அம்சமாகும். அத்துடன இந்நிகழ்வு தொடர்ந்து 08.03.2011 வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் P.குணரெட்ணம் அவர்களும், மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மணோதிதராஜ் அவர்களும்  கலந்து கொண்டது விஷேட அம்சமாகும்.

நாடுபூராவும் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்து இலட்சம் மனைப்பொருளாதார அலகுகளின் தேசிய வேலைத்திட்டம் 12.03.2011 அன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கியில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் காலை 11.21க்கு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகான சபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக மங்கள விளக்கை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதன் பின் 11.33மணிக்கு மரநடுகையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களும், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும், கமநலசேவை உத்தியோகத்தர்களும், மீன்பிடி இலாக உத்தியோகத்தர்களும், கால்நடை திணைக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

பிரதம விருந்தினர் தமதுரையில் மஹிந்த சிந்தனை மூலம் நாடு பூராகவும் செய்யப்படும் இத்திட்டம் நம் வீட்டிற்கு  அன்றாடம் தேவைப்படும் உணவு வகைகளை நாமே உற்பத்தி செய்ய வழிவகுக்கின்றது. இத்திட்டம் வெற்றி பெற கிராம உத்தியோகத்யோகத்தர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் தெரிவு செய்யப்படும் பயனுகரிகளின் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாவட்ட அரச அதிபர் தமதுரையில் முன்னைய காலங்களில் தமக்கு தேவையான மரக்கறிகளை நம் முதியோர்  மரக்கறிகளை வீட்டிலேயே உற்பத்தி செய்து  வாழ்ந்து வந்துள்ளார்கள். அதே போல் இவ்வேலைத்திட்டம் மூலம் நாமும் வளமிகு வீட்டை உருவாக்கி வியத்தகு நாட்டை கட்டியேழுப்ப முயற்சிப்போம். எனவே தங்கள் தங்கள் கிராமங்களில் 100 பயனாளிகளை தெரிவு செய்து சிறந்த வீட்டு மனைப்பொருளாதாரத்தை ஏற்படுத்த கிராம உத்தியோகத்தர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சிறப்பான சேவை செய்து சிறந்த மாவட்டத்திற்கான முதலிடத்தை பெற வழிசமைக்க வேன்டும் என்றார். இதை தொடர்ந்து வருகை தந்த அதீதிகள் அனைவரும் சமுர்த்தி வங்கியில் மர நடுகையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சிறந்த விவசாயி ஒருவரது வீட்டுத்தோட்டம் பார்வையிப்பட்டதுடன் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஆரம்ப பயிர் விதைகளும், பசளைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வானது பல்வேறு இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டதால் காத்தான்குடிலும் நடைபெற்றது. இதில் பிரதியமைச்சர் M.L.A.M.ஹிஸ்புல்லா  கலந்து  கொண்டு இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன் மரக்கன்றுகளும் நடப்பட்டு  மரக்கறி விதைகளை பயனாளிகளுக்கு வழங்கியும் வைத்தனர்.
தொடரும்.....











Comments