(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் 1991 முதல் கல்லடிவேலூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறார். 1960.09.15 பிறந்த இவர் 5ம் வகுப்புடன் தன் படிப்பை முடித்துக் கொண்டார். 1976ம் ஆண்டு உன்னிச்சையை சேர்ந்த மாட்டின் பியதாஸ என்பவரை திருமனம் செய்து கொண்டார் இவருக்கு சதாலட்சுமி என்ற அன்பு மகள் உண்டு. சமுர்த்தி திட்டத்தில் 1998 முதல் ஒரு ஆரம்பகால உறுப்பினராக இணைந்து செயற்பட்டு வருகின்றார். கலைமகள் சமுர்த்தி சங்கத்தில் செயற்படும் இவர் சமுர்த்தி வங்கியூடாக 45000/= கடன் பெற்று ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் கலைமகள் சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி மேரிசெலின் சுதாகரன்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
கல்லடிவேலூரை பிறப்பிடமாக கொண்ட இவர் 1975.05.09 அன்று பிறந்தார். இவர் க.பொ.த (சாதாரணம்) வரை கல்வி கற்றுள்ளார். இவர் முறக்கொட்டஞ்சேனையைச் சேர்ந்த சின்னத்தம்பி சுதாகரனை 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 03 அன்பு பிள்ளைகள் உண்டு. கல்லடிவேலூர் கிராமத்தில் சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் கலைமகள் சமுர்த்தி சங்கத்தில் அங்கத்தவராகவும், சாரதாதேவி சமுர்த்தி சிறு குழுவின் உறுப்பினராக சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். 2010ம் ஆண்டு கலைமகள் சமுர்த்தி சங்கத்தின் செயலாளராக செயற்பட்டவார். இவர் சமுர்த்தி வங்கி மூலம் 50000/= கடன் பெற்று சிறுகடை நடத்தி வருகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் கலைமகள் சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.தேவராணி லோகநாதப்பிள்ளை
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூரில் வசித்து வருகின்றார். இவர் 1958.01.04 பிறந்தார். இவர் க.பொ.த (சாதாரணம்) வரை கல்விகற்றுள்ளார். இவர் முனைக்காட்டை சேர்ந்த அலயப்போடி லோகநாதப்பிள்ளையை 1986ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுஜிதரன், சுஜித்திரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் பால்சேகரிக்கும் தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளார். இவர் 1999ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்து அலைமகள் சமுர்த்தி சங்கத்தில் திரேசா சிறு குழுவில் இயங்கி வருகின்றார். இதன் மூலம் சமுர்த்தி வங்கியில் 25000/= கடன் பெற்று கணவருக்கு உறுதுணையாக தையல் தொழில் மூலம் வருவாயை ஈட்டி வருகின்றார். விஷேட அம்சம் என்னவென்றால் கல்லடி வேலூரில் பல பல தனியார் அமைப்புக்கள் சிறு குழுக்கள் அமைத்த போதிலும் இவர் சமுர்த்தியில் மட்டுமே செயற்படுவது வருவதாகும். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் அலைமகள் சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் 1989 ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் 1971.11.04 பிறந்தார். இவர் 10ம்தரம் வரை கல்விகற்றுள்ளார். இவர் கல்லடிவேலூரை சேர்ந்த முருகேசு கமலநாதனை 25.03.1989 திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகா, அஸ்வினி, அனிதா, அபிஷாளினி என 04 பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் ஒரு மேசன் தொழிலாளியாக தன் வாழ்க்கையை கொண்டு நடத்திவருகின்றார். இவர் 1999ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்த இவர் அலைமகள் சங்கத்தில் இயங்கும் விசுவாமித்திரர் சிறு குழுவில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். சமுர்த்தி வங்கியூடாக கடன் பெற்று கோழி வளர்ப்பு, மற்றும் விறகு விற்பனையும் செய்து வருகின்றார். 1999ம் ஆண்டு முதல் தொடர்சிசயாக 2 வருடங்கள் தலைவராகவும் பின்பு 2008ல் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். தன்னிடம் யாரும் உதவி கேட்டால் பண உதவி இல்லாவிட்டாலும் தன்னாலான சரீர உதவி செய்வதில் கல்லடிவேலூர் கிராமத்தின் ஒரு முன்மாதிரி மகளிராக திகழ்கின்றார். இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் அலைமகள் சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.இராசமணி அழகையா
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் 1992 முதல் கல்லடிவேலூரில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். இவர் 1951.07.11ல் பிறந்தார். இவர் 4ம் வகுப்பு வரை கல்வி கற்றுள்ளார். இவர் மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் வசித்த பூபாலப்பிள்ளை அழகையா என்பவரை 1966.02.18ல் திருமணம் செய்து கொண்டார். 1998 தொடக்கம் சமுர்த்தி திட்டத்தில் இணைந்து கொண்ட இவர் மலைமகள் சமுர்த்தி சங்கத்தில் சிறப்பாக இயங்கி வருகின்றார். மற்றும் இவரது விஷேட அம்சம் அகப்பை செய்வதில் கைதேர்ந்தவராக செயற்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் மலைமகள் சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.ரமணி முத்துலிங்கம்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் சுமார் 31 வருடங்களாக கல்லடிவேலூரிலேயே வசித்து வருகிறார். இவர் 1958.10.14 பிறந்தார். இவர் 3ம் வகுப்பு வரை கல்வி கற்றுள்ளார். இவர் ஆரையம்பதியை சேர்ந்த இளையான் முத்துலிங்கம் என்பவரை 1980.03.20 திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 02 பிள்ளைகளின் உள்ளனர். 1999ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்த இவர் மலைமகள் சமுர்த்தி சங்கத்தின் பத்ரகாளி சிறு குழுவின் தலைவியாக மிக சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். இதுவரை சமுர்த்தி வங்கியில் 30000/= கடன் பெற்று தன் கணவரின் வாழ்வாதார தொழிலான மீன் பிடிக்கு தன்னாலான பங்களிப்பை செய்து வருகின்றார். 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் மலைமகள் சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என் இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.கோமளேஸ்வரி நடராஜா
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
கல்லடிவேலூரை பிறப்பிடமாக கொண்ட இவர் 1956.06.13ம் திகதி பிறந்தார். இவர் நாவற்காட்டை சேர்ந்த வாசுதேவப்போடி நடராஜாவை 1972.11.06 திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 5 பிள்ளைகளுக்கு உள்ளனர் . 5ம்தரம் வரை கல்வி கற்றுள்ளார். இவர் சமுர்த்தி திட்டம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் துர்க்கா சமுர்த்தி சங்கத்தில் இயங்கி வரும் இவர் சரஸ்வதி சிறு குழுவில் அங்கம் வகித்தும் வருகின்றார். இவ்வருடம் சங்கத்தின் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு சிறப்பாக வழிநடத்தி வருகின்றார். இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் துர்க்கா சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என மகளிர் தினத்தில் இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.சீதாரஞ்சனி ஜெயராஜசிங்கம்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூர் கிராமத்தில் வசித்து வருகின்றார். இவர் க.பொ.த (சாதாரணம்) வரை கல்வி கற்றுள்ளார். இவர் 1966.05.07ல் பிறந்தார். இவர் மட்டக்களப்பை சேர்ந்த சாமித்தம்பி ஜெயராஜசிங்கத்தை 1983.05.02ம் திகதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1999ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்துள்ள இவர் துர்க்கா சமுர்த்தி சங்கத்தின் பொருளாலராக செயற்பட்டுள்ளார். மற்றும் ஓம்சக்தி சமுர்த்தி சிறு குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். சமுர்த்தி வங்கியூடாக 70000/= கடன் பெற்று தன் கணவரின் பிரதான தொழிலான தையல் கலைக்கு உறுதுணையாக உள்ளார் எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் துர்க்கா சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.சாரதாமணி சித்திரவேல்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பு சிங்களவாடியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1966 முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக வசித்து வருகின்றார். இவர் 1943.06.13 பிறந்தார். இவர் க.பொ.த உயர்தரம் (H.S.C) வரை கல்விகற்றுள்ளார். இவர் கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட கணபதிப்பிள்ளை சித்திரவேல் என்பவரை 1975.11.22 திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிரதிமா எனும் அன்பு பிள்ளை உண்டு. 2001ம் ஆண்டு சமுர்த்தியில் இணைந்த இவர் சரஸ்வதி சமுர்த்தி சங்கத்தில் விஸ்ணு சிறு குழுவில் ஒரு அங்கத்தவராக செயற்பட்டு வருவதுடன் மாதர் சங்க செயலாளராகவும், முதியோர் சங்க அங்கத்தவராகவும், எகெட் நிறுவனத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் சரஸ்வதி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.ரேணுகா அசோகன்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் 1995 முதல் கல்லடிவேலூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். இவர் 1969.10.21ல் பிறந்தார். இவர் க.பொ.த (சாதாரணம்) வரை கல்வி கற்றுள்ளார். மட்டக்களப்பு கல்லடி வேலூரை சேர்ந்த சின்னத்துரை அசோகனை திருமனம் செய்து கொண்டார். இவருக்கு 02 பிள்ளைகள் உள்ளனர். 2009 தொடக்கம் சமுர்த்தியில் இணைந்து கொன்ட இவர் சரஸ்வதி சங்கத்தில் கணபதி சிறு குழுவில் சிறப்பாக இயங்கி வருகின்றார். தன் கணவரின் தச்சு தொழிலுக்கு சமுர்த்தி வங்கி மூலம் 25000/= கடன் பெற்றுள்ளார். மற்றும் கடந்த வருடம் இடம்பெற்ற புகைத்தல் எதிர்ப்பு கொடிவிற்பனை, சிரமதானம், முதியோர் கௌரவிப்பு, மகளிர் கௌரவிப்பு போன்ற வேலைத்திட்டங்களில் சிறப்பாக செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் சரஸ்வதி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.நாகரெத்தினம் செல்வராஜா
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
புளியந்தீவை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூர் கிராமத்தில் வசித்து வருகின்றார். முத்தையா சௌந்தரம்மா தம்பதிகளுக்கு மகளாக 1950.03.25 பிறந்த இவரை 1968ம் ஆண்டு நாவலப்பிட்டியை சேர்ந்த நல்லையா செல்வராஜா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஆறு பிள்ளைகள் கிடைத்த போதும் தன் அன்பு மகன் ஒருவனை திடீர் விபத்தில் இழந்ததை இப்போதும் கண்களில் நீர் ததும்ப நினைவு கூறுவார். இவரது கணவர் ஒரு தனியார் கணக்காளராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். 2001 தொடக்கம் சமுர்த்தி திட்டத்தில் இணைந்து கொண்ட இவர் சமுர்த்தி வங்கியூடாக 70000/= கடன் பெற்று அரிசி வியாபாரம் செய்து ஒழுங்கான முறையில் திருப்பி செலுத்தி வருகின்றார். லக்ஸ்மி சமுர்த்தி சங்கத்தின் சிறப்பாக செயற்பட்டு வருவதுடன் விவேகா சமுர்த்தி சிறு குழுவை பிரதிநிதித்துவபடுத்தும் இவர் அக்குழுவின் தலைவராக செயற்ப்பட்டுள்ளார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் லக்ஸ்மி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.சாந்தி சௌந்தரராஜன்
(2011 மதிப்பிற்குரிய மகளிர் முதியோர்)
மட்டக்களப்பு இருதயபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் 1987 முதல் கல்லடிவேலூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். அழகையா பூபதி தம்பதிகளுக்கு மகளாக 1966.11.09 திகதி பிறந்தார். கல்லடிவேலூரை சேர்ந்த இராசரெத்தினம் சௌந்தரராஜனை 1987 ம் ஆண்டு திருமணம் செய்த கொண்டார். இவருக்கு 02 பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் மேசன் தொழிலை தன் வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றார். 1998 முதல் சமுர்த்தி திட்டத்தில் லக்ஸ்மி சங்கத்தில் இயங்கிவரும் இவர் கடந்த வருடம் சிறப்பாக தலைவர் பதவி வகித்ததால் மீண்டும் இம்முறையும் இவரை மக்கள் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்தது ஒரு சிறப்பம்சமாகும். மற்றும் சரஸ்வதி சிறு குழுவின் தலைவராக செயற்பட்டும் வருகின்றார். சமுர்த்தி வங்கியூடாக 25000/= கடன் பெற்று தன் கணவரின் தொழிலுக்காக மேசன் உபகரனம் கொள்வணவு செய்து கொடுத்து சிறப்பான முறையில் மீள செலுத்தி வருகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் லக்ஸ்மி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
ஆரயம்பதியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1981 முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகிறாhர். இவர் 1950.04.16ம் திகதி பிறந்தார். இவர் க.பொ.த (சாதாரண) தரம் வரை கல்விகற்றுள்ளார். இவர் ஆரையம்பதியைச் சேர்ந்த சீனித்தம்பி பாலச்சந்திரனை 1973.7.14ம் திகதி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 05 அன்புக்குழந்தைகள் உள்ளனர். 1999முதல் சமுர்த்தியில் இணைந்திருக்கும் இவர் தலைவராகவும், செயலாளராகவும் காயத்திரி சமுர்த்தி சங்கம் சார்பாக சிறப்பாக செயற்பட்டுள்ளார். மற்றும் விவேகானந்தர் சிறு குழுவின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். மற்றும் சிக்கன கூட்டுறவு சங்க தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் காயத்திரி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி யோசப்பின் தமிழழகன்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகிறார். இவர் 1968.05.13ம் திகதி பிறந்தார். இவர் க.பொ.த (சாதாரண) தரம் வரை கல்விகற்றுள்ளார். இவர் 1990.11.24ல் நுவரெலியாவை சேர்ந்த இராசரெட்னம் தமிழழகனை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு அன்புக்குழந்தைகள் உண்டு. இவர் 1999ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்து செயலாளர், தலைவர் பதவிகளை வகித்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். மற்றும் கலைமகள் சிறு குழு தலைவராக தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றார். 90000/= சமுர்த்தி வங்கி மூலம் கடன் பெற்று சிறுகடை நடாத்தி வருகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் காயத்திரி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி யோகேஸ்வரி ஆறுமுகம்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
கல்லடியை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். நாகமணி இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளாக இவர் 1950.11.24 அன்று பிறந்தார். இவர் அமிர்தகழியை சேர்ந்த வீரன் ஆறுமுகத்தை 1970ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சுமார் 35 வருடங்களாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் இவர்கள் பல இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும் தம் முயற்சியை கைவிடாது தற்போதும் அத்தொழிலில் ஈடுபடுவது விஷேட அம்சமாகும். தற்காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் கூட இவரது கால்நடை இறந்த சம்பவங்களும் உண்டு. பல குடும்பங்களுக்கு காலையில் பால் வழங்கி தம் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி வாழ்ந்து வரும் ஒரு குடும்பமாகும். சமுர்த்தி திட்டம் 2005ம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் இவர் தற்போது தான் முதல் சுயதொழில் கடனாக 30000/= பெற்று தம் தொழிலை விருத்தி செய்துள்ளார். சக்தி சமுர்த்தி சங்கத்தில் இயங்கி வரும் இவர் தேவி சிறு குழுவில் ஒரு அங்கத்தவராகவும் செயற்படுகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் சக்தி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய மகளிர் என இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.சாருகேசி ரங்கநாதன்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூரில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். தியாகராஜ ஐயர் தம்பதிகளின் மகளாக 1964.04.08 பிறந்தார். இவர் கணகசபாபதி குருக்கள் ரங்கநாதனை 1987.07.06 திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ஒரு சாரதியாக தன் தொழிலை செய்து வருகின்றார். இவர் 10ம் தரம் வரை கல்வி கற்றுள்ளார். 1999ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்த இவர் சக்தி சமுர்த்தி சங்கத்தில் கலைவாணி சிறு குழுவின் தலைவராக சிறப்பாக செயலாற்றி வருகின்றார். மற்றும் மகளிர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினராகவும், காளியம்மன் தாய்சங்க உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். இவரது மகள் கடந்த வருடம் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டது விஷேட அம்சமாகும். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் சக்தி சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய என மகளிர் தினத்தில் இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.தேவராணி மகாலிங்கம்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூரில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். இவர் 1960.02.07ம் திகதி பிறந்தார். இவர் கணபதிப்பிள்ளை மகாலிங்கம் என்பவரை 1978.11.29 திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் மீன்பிடி தொழிலை தன் வாழ்வாதார தொழிலாக செய்து வருகின்றார். இவர் 9ம் தரம் வரை கல்வி கற்றுள்ளார். இவருக்கு இரண்டு அன்புக்குழந்தைகள் உண்டு. 2002ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்த இவர் அபிஹாமியா சமுர்த்தி சங்கத்தில் கோணேசர் சிறு குழுவின் தலைவராக சிறப்பாக செயலாற்றி வருகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் அபிஹாமியா சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய என மகளிர் தினத்தில் இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
திருமதி.வசந்தி லோகேஸ்வரன்
(2011 மதிப்பிற்குரிய மகளிர்)
துறைநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூரில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் மகளாக 1967.04.30 பிறந்தார். இவர் துறைநீலாவணையை சேர்ந்த பிள்ளையான்தம்பி லோகேஸ்வரனை 1983.07.11 திருமணம் செய்து கொண்டார். இவர் 10ம் தரம் வரை கல்வி கற்றுள்ளார். இவருக்கு 07 அன்புக்குழந்தைகள் உள்ளனர். 2004ம் ஆண்டு முதல் சமுர்த்தி திட்டத்தில் இணைந்த இவர் அபிஹாமியா சமுர்த்தி சங்கத்தின் தலைவராக கடந்த வருடம் கடமையாற்றினார். இவரது சேவையை மீண்டும் ஒரு தடவை அபிஹாமியா சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் இவ்வருடமும் தலைவராக செயற்படுகின்றார். மற்றும் அபிராமி சிறு குழுவின் தலைவராக சிறப்பாக செயலாற்றி வருகின்றார். மற்றும் மகளிர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினராகவும், எகெட் நிறுவனத்தின் உறுப்பினராகவும், பிராக் நிறுவனத்தின் உறுப்பினராகவும், சக்தி வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினராகவும், மக்கள் வங்கி சுயதொழில் சிறுகுழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். எனவே இவரை 2011ம் ஆண்டு கல்லடிவேலூர் அபிஹாமியா சமுர்த்தி சங்கம் மதிப்பிற்குரிய என மகளிர் தினத்தில் இவரை கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.
தொடரும்....
எனது பதிவேட்டில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களின் பதிவுகள்...
எனது பதிவேட்டில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களின் பதிவுகள்...எனது பதிவேட்டில் நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களின் பதிவுகள்....
சமுர்த்தி பத்திரிக்கையில் எம் கிராம செய்தி
2011 மகளிர் தினத்தில் பிரதேச செயலாளரை வாழ்த்தி வழங்கப்பட்ட வாழ்த்துப்பா
Comments
Post a Comment