நானும் என் சமுர்த்தியும் 57ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் 57ம் தொடர்.......

2011ம் ஆண்டு வெள்ளத்துடன் தைமாதம் ஓடிக் கொண்டிருந்து  தைப்பொங்கல் சேமிப்பு, கோலம் போடுதல் நிகழ்வு, பூமாலை கட்டுதல் போட்டிகள் நடாத்தும் படி சுற்றிக்கை வெளியானது. நானும் வெள்ளம் காரணமாக சேமிப்பை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, இருந்த போதிலும் கிராம மக்கள் விடுவதாக இல்லை இந்த வருடமும் சேமிப்பை சேமித்து காட்டுவோம்  என சங்கங்கள் முடிவெடுத்தன.

 

சங்கங்களுக்கு இடையில் போட்டிகளை நடாத்தினேன் அப்படி இருந்தும் இவ்வருடமும் தைப்பொங்கல் சேமிப்பில் கல்லடி வேலூர் கிராமம் முதலிடத்தை பெற்றுக் கொண்டது. மீண்டும் 2011ம் ஆண்டும் எனக்கு வெற்றியா  தொடங்கியது. இதில் கிராம ரீதியாக அலைமகள் சமுர்த்தி சங்கம் அதிக சேமிப்பை செய்து  முதலிடத்தை பெற்றுக் கொண்டது. இதற்கு அலைமகள் சமுர்த்தி சங்கத்தின் தலைவி நாசர் தாட்சாயினி அர்ப்பணிப்பான சேவையை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். கோலம் போடுதல் போட்டியிலும் பூ மாலை கட்டுதல் போட்டியிலும் கலந்து கொள்ள போட்டியாளர்களை தயார் செய்தேன். கல்லடி சமுர்த்தி வங்கியிலே போட்டிகள் நடைபெற்றன கல்லடி வலயத்திற்குட்பட்ட கிராமங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டன.

 

கல்லடி வலய உதவியாளர் K.குமனன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வலய வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 2010ல்  கோலம் போடுதல் போட்டியில் முதலிடத்தை நாம் பெற்றிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 2011ம் ஆண்டும் வெற்றி பெற்றால் சிறப்பாக இருக்கும் என போட்டியாளர்களான திருமதி.சாருகேசியிடமும், திருமதி.புவனேஸ்வரியிடமும் தெரிவித்து இருந்தேன். அதே போல் பூமாலை கட்டும் போட்டியில் பங்கெடுத்த திரு.சிவாவிடமும் கூறி இருந்தேன். கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. முகாமையாளர் ஒவ்வொரு கோலமாகவும் பார்வையிட்டு வந்தார். அதே போல் பூ மாலைகளையும் பார்வையிட்டு வந்தார். எல்லோருக்கும் பதற்றம் யார் முதலிடத்தை பெறுவார்கள் என்று.



 

உதவியாளர் K.குமனன் அவர்கள் கடைசியாக முடிவுகளை அறிவிக்க தயாரானார். எல்லோரும் அமைதியுடன் எதிர்பார்க்க கோலம் போடுதல் போட்டியில் தானியங்களை பயன்படுத்தி கோலமிட்ட கல்லடிவேலூர் கிராமம் முதலிடத்தை பெற்றதாகவும், பூமாலை கட்டுதல் போட்டியில் குறித்த நேரத்தில் அழகானதும் பெரியதுமான பூமாலையை கட்டிய கல்லடிவேலூர் கிராமம் முதலிடத்தை பெற்றதாகவும் அறிவித்தார். எனக்கு மிகுந்த சந்தோசம் மீண்டும் வெற்றியுடன் களத்தில் பணியாற்றினேன்.

தைப்பொங்கல் சேமிப்பில்  அதிக சேமிப்பு செய்த சங்கங்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது குறிப்பாக தன் அலைமகள் சங்கம் இவ்வருடம் முதலிடத்தை பெற்றதை சிறப்பிக்கும் முகமாக சங்க தலைவியான தாட்சாயினி நாஸர் அவர்கள் விசேட பரிசில்களை அதிக சேமிப்பு செய்தவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கல்லடி வலய உதவியாளர் K.குமணன் அவர்கள் வருகை தந்த பரிசில்களை வழங்கி வைத்தார்.

தொடரும்.......







Comments