நானும் என் சமுர்த்தியும் 55ம் தொடர்.......
சமுர்த்தி திட்டத்தில் 2010ம் ஆண்டு ஒரு விசேடமான ஆண்டாக திகழ்ந்தது. சமுர்த்தி பயனாளிகளுக்காக மின்சாரத்தினை பெற்றுக் கொள்ள 'மின்னிணைப்பு உதவி' கடன் (விதுளி அத்வெல) விசேட கடன் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இக்கடனானது உயர்ந்த பட்சமாக சமுர்த்தி பயனாளிக்கு ரூபா 30,000 வழங்கப்பட்டதுடன் இதன் தவணைக்காலம் 60 மாதங்களாகவும் இதன் வட்டி வீதம் ஆண்டொன்றுக்கு 12% வீதமாகவும் காணப்பட்டது.
மற்றும் சுயதொழில், மிஹிஜய கடன் திட்டத்தின் ஊடாக வருமானமீட்டல் கருத்திட்டத்தினை மேற் கொள்ள ரூபா 100000 வரை கடன் வழங்கப்பட்டது. மீன்பிடி, பயிர்ச்செய்கைக்காக ரூபா 25,000 தொடக்கம் ரூபா 75,000 பெறுமதியான கடன்கள் வழங்கப்பட்டன. 2010ம் ஆண்டு நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட மகுட அபிவிருத்திக் கடன் திட்டத்தின் கீழ் (கிருளசங்வர்த்தனய) இதுவரை காலமும் சுயதொழிலுக்காக ரூபா 100000 வழங்கப்பட்டது. அதன் உச்ச எல்லையை ரூபா 250000 வரை 2010ம் ஆண்டின் இறுதியில் அதிகரிப்பும் செய்யப்பட்டது.
சமுர்த்தி பயனுகரி வீடொன்றினை நிர்மாணித்துக் கொள்ள, பகுதி அளவு முடிக்கப்பட்ட வீடொன்றின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், வீட்டினை திருத்துதல் போன்ற தேவைகளுக்காக ரூபா 30,000 வரையிலான கடன் வழங்கப்பட்டு வந்தது. 2010ம் ஆண்டின் இறுதியில் இத்தொகை ரூபா 50,000 வரை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு 2004ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நுகர்வுக்கடன் திட்டம் ஆரம்பமானது. இவ்வேலைத்திட்டம் 2008ம் ஆண்டு வரை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் வருடாந்தம் 9% வட்டிக்கு ரூபா 50,000 வழங்கப்பட்டது. இக்கடன் திட்டம் சகல சமுர்த்தி பணியாளர்களுக்கும் உரித்துடையதாக மாற்றப்பட்டு இக்கடன் கடன்தொகையினை மீளச்செலுத்தும் காலமானது 60 மாதங்களாகவும் கணிக்கப்பட்டது. இந்நுகர்வு கடனானது 2010.10.18ம் திகதியிலிருந்து 50,000 ரூபாவில் இருந்த தொகையினை 100,000 ரூபா வரை அதிகரித்தும் காணப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டை பொறுத்தவரை சமுர்த்தி அதிகார சபையால் இலங்கை பூராகவும் தமிழ் - சிங்கள புத்தாண்டு வைபவத்துடன் இனைந்ததாக சகல சமுர்த்தி வங்கிகளிலும் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்கள் ஒரு வாரத்தில் சுமார் 512 மில்லியன் ரூபாக்கள் சேகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டு மொத்தத்தில் 2010ம் ஆண்டு ஒரு சுபீட்சத்தின் ஆண்டாக சமுர்த்திக்கு மாத்திரமல்ல என் வாழ்விலும் ஒரு சுபீட்சமான ஆண்டாக முடிவுக்கு வந்தது. மீண்டும் 2011 உங்களை சந்திக்கின்றேன் இன்னும் அதிகமான தகவல்களுடன்.....
தொடரும்.........
என்னால் வெளியிடப்பட்ட 6வது சமுர்த்தி ஸ்நேகம் பத்திரிக்கை
Comments
Post a Comment