நானும் என் சமுர்த்தியும் 54ம் தொடர்........

 நானும் என் சமுர்த்தியும் 54ம்  தொடர்........

இதற்கிடையில் சமுர்த்தி சங்கங்கள் இனைந்து நவராத்திரி விழாவை கல்லடிவேலூர் நடாத்த விரும்பின. அதன் அடிப்படையில் ஸ்ரீ சக்தி வித்தியாலத்தில் நவராத்திரி விழா நடைபெற்றுக் கொண்டு வந்தது அதில் நாமும் இனைந்து நவராத்திரி விழாவை நடாத்தலாம் என சமுர்த்தி ஒன்றியம் தெரிவிக்க, அனைத்து சங்கங்களும் ஸ்ரீ சக்தி வித்தியாலத்துடன் இனைந்து நவராத்திரி விழாவை நடாத்த விரும்பின. தாய் சங்கம் முன்னின்று சகல வேலைகளையும் செய்து நடாத்தியது. சமுர்த்தி திட்டம் மூலம் என்னென்ன செயற்பாடுகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டதோ அதை விட எனது கிராம மக்களின் உதவியுடன் பல்வேறு வேலைத்திட்டங்களையும் செய்த வந்தேன்.

 இதற்கிடையில் புளிந்தீவு சமுர்த்தி சமுர்த்தி வங்கிக்கு புதிதாக முகாமையாளராக பதவியேற்ற K.நவரஞ்சன் அவர்கள் கடன் அறவீடு பற்றிய ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தார். கடன் வழங்குதல் மற்றும் அறவீடுகளை அதிகரிப்பதற்காகவுமே இக்கருத்தரங்கு இடம்பெற்றது. இதற்கு புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் இயங்கும் 40 சமுர்த்தி சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும் மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.

இதில் உரையாடிய பிரதிப்பாளர் அவர்கள் சமுர்த்தி திட்டம் ஆரம்பமாகி 13 வருடங்கள் கழிந்தும் இன்னும் சமுர்த்தி வங்கியில் கடன் பெறும் பொறி முறை தெரியாமல் பல சங்கங்கள் இயங்குவதாக குறிப்பிட்டதுடன், இது உங்களின் வங்கி எனவே இவ்வங்கியை பாதுகாக்க வேண்டியது உங்களது கடமை என்றார்.  தலைமையக முகாமையாளர் குறிப்பிடுகையில் புளியந்தீவு சமுர்த்தி வங்கி தற்போது 4 கோடி ரூபாக்களை சேமித்து இயங்கி வருவதாகவும் இனிவரும் காலங்களில் இதை விட அதிக சேமிப்பை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

 இதன் போது ஒவ்வொரு கிராமத்திலும் எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் இனி வரும் காலங்களில் எவ்வளவு கடன் வழங்கப்பட வேண்டும் என்றும் எவ்வளவு கடன் தொகை அறிவிடப்பட்டுள்ளது என்றும் காலம் கடந்த கடன்கள் எவ்வளவு, அறவிட முடியா கடன்கள் எவ்வளவு என்பது பற்றியும் வரிவாக ஆராயப்பட்டு வங்கி முகாமையாளர் K.நவரஞ்சனின் அவர்களின் நன்றியுரையுடன் முடிவுற்றது.



நவராத்திரியை கொண்டாடிய நாங்கள் 2010ல் ஒளிவிழாவையும் நடாத்த திட்டமிட்டோம். இதற்காக அதிபரின் உதவியை நாடி பாடசாலை மண்டபத்தில் 20.12.2010 அன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது இந்நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து வருகை தந்த வணபிதா அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் கல்லடிவேலூர் கிராம உத்தியோகத்தர் T.சிவலிங்கம் அவர்களும் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்ஜோதி அவர்களும் சிலோன் சொயிஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை பிரதிநிதி இ.ரஜீவ்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட சிறார்களுக்கு பாடசாலை அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டதுடன் கிறிஸ்து பிறப்பு பற்றிய பாடல்கள் பாடப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதற்கான அனைத்து ஒழுங்குகளையும் கல்லடி வேலூர் தாய் சங்கமே ஏற்று செய்து முடித்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2010ம் ஆண்டு பல வெற்றிகளை தந்தாலும் அதற்கு உறுதுணையாக இருந்தது சமுர்த்தி ஒன்றிய தாய் சங்கம் தான். எனவே அவர்கள் மனதில் களைப்பு என்கின்ற எண்ணம் ஓடக் கூடாது என்பதற்காகவும் அடுத்த வருடம் இதை விட ஓட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, விரும்பிய அங்கத்தவர்களை அழைத்துக் கொண்டு நாவலடி கிராமத்திற்கு ஒரு சுற்றுலா பயணத்தை மேற் கொண்டோம். அங்கு ஒரு நிறுவன கட்டிடத்தில் கலை, கலாசார, விளையாட்டு போட்டிகளை நடாத்தி வெற்றி பெற்றோருக்கு பரிசில்களை வழங்கி மக்களுடன் மக்களாக எனது குடும்பமும் இனைந்து மகிழ்ச்சியில் திழைத்தோம். இவ்வாறு 2010ம் வருட முடிவுக்கு வர முயற்சித்தது.

தொடரும்.........

கல்லடி வேலூர் கிராமத்தில் நவராத்திரி விழா.....


நாவலடி கிராமத்தில் கல்லடிவேலூர் கிராமத்தின்  சமுர்த்தி ஒன்று கூடலின் போது...




Comments