நானும் என் சமுர்த்தியும் 53ம் தொடர்..........

 நானும் என் சமுர்த்தியும் 53ம் தொடர்..........

நேற்றையதினம் 2010ல் முதியோர் கௌரவிக்கப்பட்டத்தை அறிந்த கொண்டோம். இன்று அதன் தொடராக அன்று என்னால் வெளியிடப்பட்ட கையேட்டினை தங்கள் பார்வைக்காக சமர்பிக்கின்றேன்.


திருமதி.கந்தையா அன்னம்மா

 (2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் வாழ்நாள் சாதனையாளர்)

கல்லடிவேலூர் கிராமத்தில் 100 வயதை தான்டிய ஒரு அம்மணி உள்ளார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பவே மாட்டீர்கள் ஆனால் உண்மை தான் இதுவரை காலமும் யாரும் படம் போட்டு காட்டாததை சமுர்த்தி திட்டம் படம் போட்டு காட்டுகின்றது. இனி நாம் அவரைப்பற்றி அறிந்து கொள்வோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். சீனித்தம்பி கண்ணம்மா தம்பதிகளின் மகளாக 1905ம் ஆண்டு பிறந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரை 1920ம் ஆண்டு கல்லடியை சேர்ந்த கந்தையா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வள்ளியம்மை என ஒரு அன்பு குழந்தை கிடைத்தது.   காலம் நகர நகர  இவரது கணவர் 1945ம் ஆண்டு காலத்தின் விதியால் பிரிந்து சென்று விட்டார். இருந்த போதிலும் தன் ஒரே பிள்ளையை வளர்க்க வீட்டுவேலை செய்து தன் குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். இப்படி இருக்கும் போது தன் ஒரே பிள்ளையை நல்லதம்பி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார் இவருக்கு ஆறுமுகவடிவேல்இ சோதிமலர்இ பரமானந்தம்இ அருணாச்சலம்இ நாராயணமூர்த்திஇ சரஸ்வதிஇ கோமதிஇ ருக்மணிஇ மல்லிகாஇ ஜெயந்தி என 10 பேரப்பிள்ளைகளை கண்டு மூன்றாவது தலைமுறைக்கு காலடி எடுத்து வைத்தார். 4ம் தலைமுறையில் 27குழந்தைகளைக் கண்ட இவர் தன் 5ம் தலைமுறையில் 34குழந்தைகளை கண்டு 6ம் தலைமுறைக்கும் நான் வாழ்வேன் என வாழ்ந்து வருகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 1956ம் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்குஇ 1978ல் இடம்பெற்ற சூறாவளிஇ 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரலை போன்ற மூன்று மிகப்பெரிய இயற்கை அழிவை சந்திருக்கும் இவர் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்றே கூறவேன்டும். தற்போது தன் பேரப்பிள்ளையான அருணாசலம் குடும்பத்துடன் வசித்துவரும் இவர் கண் பார்வை சற்று குறைவடைந்தும்இ காது சற்று கேட்பது குறைவாக இருப்பதாக குறிப்பிடுகின்றார்கள். ஆனால் குரலை கேட்டு உரியவரை இனம் காண்பதாகவும் இவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோர் வாழ்நாள் சாதனையாளர்  எனும் பட்டம் சூட்டி கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.இராசமாணிக்கம் பத்மாதன்

 (2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

மட்டக்களப்பு கல்லடி உப்போடையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1978 முதல் கல்லடிவேலூரில் நிரந்தரமாக வசித்து வருகின்றார். இராசமாணிக்கம் பொன்னம்மா தம்பதிகளின் மகனான இவர்  1951.09.30 திகதி  கல்லடி உப்போடையில் பிறந்த இவரை 1977ம் ஆண்டு குணலட்சுமி திருமனம் செய்து கொண்டார். அவர் இவரை விட்டு கால இறைவனிடம் சேர்ந்தாலும் தான் பெற்ற அன்பு குழந்தைகளான ராஜ்குமார்இ ரகுநாதன்இ ரஜனியுடன் இன்பமாக வாழ்ந்து வருகின்றார். தனது பிரதான தொழிலான மேசன் தொழிலை தற்போதும் இவர் செய்து வருகின்றார் என்பது ஒரு சிறப்பம்சமாகும். சமுர்த்தி பயனுகரியான இவர் தன் மகள் கலைமகள் சமுர்த்தி சங்கத்தில் சரஸ்வதி சிறு குழுவில் இயங்குவதால் 2010ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தில் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.செல்லையா இராமலிங்கம்

(2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

களுத்துறை மாவட்டத்தில் மத்துகமையை பிறப்பிடமாக கொன்ட இவர் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் காரணமாக  இடம்பெயர்ந்து வந்து கல்லடிவேலூர் கிராமத்தில் இன்று வரை நிரந்தரமாக வசித்துவருகின்றார். செல்லையா ஆனந்தம்மா தம்பதிகளின் மகனாக 1953.07.24  திகதி மத்துகமவில் பிறந்த இவரை 1938ம் ஆண்டு கங்கேஸ்வரி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சானிஸ்இ சதீஸ்குமார்இ ரஜித்இ டினேஸ்காந் என 04 அன்பு குழந்தைகள் உள்ளனர். ஆரம்ப காலங்கனில் மத்துகம பிரதேசத்தில் இறப்பர் வெட்டும் தொழிலாளியாக கடமை புரிந்த இவர் தற்போது ஆலய சிற்பங்களை செதுக்கும் கலைஞர்களுக்கு உதவியாளராக செயற்பட்டு தன் வாழ்க்கையை நடத்தி வருகின்றார். இவரின் மனைவி அலைமகள் சமுர்த்தி சங்கத்தில் விசுவாமித்திரர் குழுவில் மிக சிறப்பாக செயற்பட்டு  வருகின்ற காரணத்தால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.இளையான் முத்துலிங்கம்

(2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதியை பிறப்பிடமாக கொண்ட இவர் 1979ம் ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இளையான் சின்னப்புள்ள தம்பதிகளின் மகனாக 1956.07.15 திகதி பிறந்த இவரை 1979ம் ஆண்டு ரமணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூரியபவானிஇ சந்திரவதனி என இரண்டு அன்பு குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்க்கையை கொண்டு நடத்த மீன் பிடி தொழிலை பிரதானமாக கொண்டு செயற்படும் இவர் சமுர்த்தி திட்டம் ஊடாக 2008ம் ஆண்டு வாழ்வாதார ஊக்குவிப்பு கடனாக ரூபா 20000ஃஸ்ரீ பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை பெற்று அக்கடனை சிறப்பாக திருப்பி செலுத்தி முடித்துள்ளார். மீனவ சங்கத்தின் அங்கத்தவரான இவர் ஒரு சிறந்த உழைப்பாளி என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இவரின் மனைவி மலைமகள் சமுர்த்தி சங்கத்தில் வாணி சிறுகுழுவில் மிக சிறப்பாக இயங்கிவருவதால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.செல்லத்துரை இராசையா

 (2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லாற்றை  பிறப்பிடமாக கொண்ட இவர் 1972ம் ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். இவர் 1943.01.22ம் திகதி பிறந்தார். இவரை தங்கரெட்னம் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று  அன்பு குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்க்கையை கொண்டு நடத்த ஆரம்பத்தில் தச்சு தொழிலை செய்த வந்தார் பின்பு சாந்தி சினிமாவில் தொழில் புரிந்து தற்போது இவர் சிற்றூண்டி தயாரிப்பு கதிரைஇ மணவறை போன்றவற்றை வாடகைக்கு விட்டு தன் வாழ்க்கையை கொண்டு நடாத்துகின்றார். கமநெகும வேலைத்திட்டத்தில் 50000 ரூபா பெறுமதியான கதிரைகளை பெற்று அக்கடனை தற்போது திருப்பி செலுத்தி வருகின்றார். இவர் லக்ஸ்மி சமுர்த்தி சங்கத்தில் காளியம்மன் சிறுகுழுவில் மிக சிறப்பாக இயங்கிவருவதால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி

 (2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுநகரை பிறப்பிடமாக கொண்ட இவர் 1971ம் ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். சுப்பிரமணியம் தெய்வானை  தம்பதிகளின் மகனாக 1940.03.03 திகதி பிறந்தார். இவர் கனிஸ்ட தரம்  (து.ளு.ஊ) வரை கல்வி கற்றுள்ளார். இவரை 1960ம் ஆண்டு சின்னத்தங்கம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்புதாஸன்இ அன்புமதிஇ அன்புதேவிஇ அன்புநிதிஇ அன்புவாணி என ஐந்து அன்பு குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்க்கையை கொண்டு நடத்த காவலாளி தொழிலை செய்து வந்தார் இவர் சமுர்த்தி திட்டம் ஊடாக கடனாக ரூபா 30000ஃஸ்ரீ பெற்று அக்கடனை சிறப்பாக திருப்பி செலுத்தி வருகின்றார். கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக  ஒரு சில காலம்  செயற்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்  சக்தி சமுர்த்தி சங்கத்தில் அபிராமி சிறுகுழுவில் மிக சிறப்பாக இயங்கிவருவதால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.கந்தப்பன் இராசையா

 (2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் 1972ம் ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். கந்தப்பன் பொன்னுக்குட்டி தம்பதிகளின் மகனாக 1952.03.09ம் திகதி பிறந்தார். இவரை 1972ம் ஆண்டு மனோன்மணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்சினிஇ பிரியராணிஇ பிரியயாழினிஇ ராஜ்கண்ணா என நான்கு  அன்பு குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்க்கையை கொண்டு நடத்த தச்சுத்தொழிலை பிரதானமாக கொண்டிருந்தார். தற்போது சுகயீனம் காரணமாக தொழில் செய்ய முடியாமல் வாழ்கிறார். இவரின் மனைவி சரஸ்வதி  சமுர்த்தி சங்கத்தில் மிக சிறப்பாக இயங்கிவருவதால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.சாமித்தம்பி சண்முகம்

 (2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

கடுக்காமுனையை பிறப்பிடமாக கொண்ட இவர் 1968ம் ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். சாமித்தம்பி தாந்திப்பிள்ளை தம்பதிகளின் மகனாக 1938.12.25ம் திகதி பிறந்தார். இவரை 1968ம் ஆண்டு காளியம்மை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  சுதாகரன்இ சுதாஷினிஇ சுலோஜினி என மூன்று  அன்பு குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்க்கையை கொண்டு நடத்த பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியராக கடமையாற்றினார்.இவரின் மனைவி துர்க்கா  சமுர்த்தி சங்கத்தில் மிக சிறப்பாக இயங்கிவருவதால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.செல்லமுத்து தர்மலிங்கம்

(2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

திருகோனமலை மாவட்டத்தில் கொய்யாவளவை பிறப்பிடமாக கொண்ட இவர் 1970ம் ஆண்டு முதல்  தன் சகோதரருடன் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். செல்லமுத்து ராக்காயி  தம்பதிகளின் மகனாக 1948.12.02 திகதி பிறந்தார். பிறப்பாலேயே தன் இடது காலை போலியோ நோய் தாரை வார்த்து கொடுத்து விட்டே இவ்வுலகில் உதித்தார்.  போலியோ பாதிப்பு  இருந்தாலும் யாரிடமும் கையேந்தாமல் இன்றைய சாந்தி சினிமாவில் அன்று கடமையாற்றினார்இ  ஆனால் என்ன வேதனை தெரியுமா இற்றைவரை அவருக்கு வழங்க வேண்டிய ஊழிய சேமலாப நிதி (நு.P.கு) இதுவரை வழங்கப்படவில்லை இதற்கு காரணம் இவருக்குறிய அடையாள அட்டை இல்லாததேயாகும் என கூறுவதாக இவரின் குடும்பம் கூறுகின்றது. இதை தொடர்ந்து சிவா உணவகத்தில் கடமையாற்றிய போது  பாரிச வாத நோய் காரணமாக தன் மற்றைய காலையும் ஒரு கையையும் இழந்துள்ளார். இதுவரை காலமும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் இவரை கவனிப்பதற்கு யாரும் இல்லை இவருடன் பிறந்த சகோதரர்களும் இறந்து விட்டனர். எனவே இவரை தன் சகோதரரின் பிள்ளையே பராமரித்து வருகின்றது. இவரின் நிலையை அறிந்த ஒரு நிறுவனம் இவருக்கு ஒரு சக்கர நாற்காலி வழங்கியுள்ளது. வேறு எந்த நிறுவனமோ சமுர்த்தியோ இவருக்கு உதவவில்லை என இவரை காயத்திரி சங்கம் கௌரவிக்க எண்ணியது சமுர்த்தி பயனுகரி என்று அல்ல மனிதாபிமானத்துடன் யாரும் இவருக்கு உதவி புரிய முன்வரவேண்டும் என்றே. எனவே நல் உள்ளம் கொண்டவர்கள் இவருக்க உதவி புரிய விரும்பினால் உதவுவதோடு இவரின் (நு.P.கு) பணத்தை எடுத்து கொடுக்க அரச உயர் அதிகாரிகள் முயற்சி எடுக்குமாறு தயவாய் வேண்டி நிற்கின்றோம். இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது


திரு.சிதம்பரப்பிள்ளை மயில்வாகனம்

 (2010ம் ஆண்டிற்கான மதிப்பிற்குரிய முதியோர்)

பதுளை மாவட்டத்தில் எல்லே பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் 1996ம் ஆண்டு முதல் கல்லடிவேலூரை நிரந்தர வசிப்பிடமாக கொண்டு வசித்து வருகின்றார். சிதம்பரப்பிள்ளை ராமாயி தம்பதிகளின் மகனாக 1955.07.09ம் திகதி பிறந்தார். இவரை 1978ம் ஆண்டு செல்வராணி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுரேஸ்குமார்இவிஜயலட்சுமி என இரண்டு  அன்பு குழந்தைகள் உள்ளனர். தன் வாழ்க்கையை கொண்டு நடத்த ஆரம்ப காலங்களில் தேயிலை தொழிற்சாலையில் பணி புரிந்துள்ளார். தற்போது மலையகத்தில் இருந்து தேயிலை கொள்வனவு செய்து வந்து மட்டுநகரில் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்த வருகின்றார். இவர் பதுளையில் இறந்தோர் நலன்புரி சங்கத்தை ஆரம்பித்து அவரது கிராமத்தில் ஒருவர் இறக்கும் பட்சத்தில் அவருக்கு அச்சங்கம் மூலம் பண உதவி செய்து வந்துள்ளார் சுமார் 16 வருடமாக தலைவராக இருந்து இதை நடத்தி வந்துள்ளார். ஆரம்பத்தில் 2000 ரூபாவில் தொடங்கி தான் விலகும் போது இத்தொகையை 20000 ரூபாவாக்கி விட்டு தான் இங்கு வந்துள்ளார். இத்திட்டத்தை இங்கு ஏற்படுத்த பல்வேறு முயற்ச்சி எடுத்தும் பயன் தரவில்லை என மனவேதனையுடன் தெரிவிக்கின்றார். இவரின் மனைவி அபிஹாமியா  சமுர்த்தி சங்கத்தில் மிக சிறப்பாக இயங்கிவருவதால் இவரை 2010ம் ஆண்டின் மதிப்பிற்குரிய முதியோராக கல்லடிவேலூர் சமுர்த்தி தாய் சங்கம் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது.

தொடரும்.....

2010ம் ஆண்டு வெயிவந்த சமுர்த்தி சஞ்சிகையில் எமது கிராம செய்திகளும் வந்தன.....



Comments