நானும் என் சமுர்த்தியும் 52ம் தொடர்..........

 நானும் என் சமுர்த்தியும் 52ம் தொடர்..........

நவராத்திரியை முன்னிட்டு மண்டபத்தில் கும்பம் வைத்துள்ளதாகவும் அதை எடுக்க முடியாது என்றும் அதிபர் கூறினார். அப்போது நான் கேட்டேன் அன்று சரி என்று கூறினீர்களே டிச்சர்  என்றேன் தம்பி மறந்தே விட்டேன் தன்னை மன்னித்துக் கொள்ளும் படி கூறினார். சரி என்னடா செய்வது எல்லா ஒழுங்கும் செய்து முடித்தாயிற்று பிரதம விருந்தினராக அப்போதைய மாகான சபை உறுப்பினர் பூ.பிரசாந்தனையும் அழைத்திருந்தோம் அவரும் சரி என்று கூறி இருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை உடனடியாக தாய் சங்கத்தை அழைத்து கல்லடிவேலூரில் வேறு எங்கு ஒரு மண்டபம் உண்டு என்பதை விசாரிக்கும் படி கூறினேன் அப்போது மணி காலை 10 மணி.



பாலவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் CLC கட்டிடம் இருப்பதாகவும் அதை துப்பரவு செய்து தான் பாவிக்கலாம் என கூறப்பட்டது. நானும் ஆலய தலைவரிடம் கோரிய போது அதை உடனடியாக தருவதாகவும் அதை துப்பரவு செய்ய தங்களிடம் ஆட்கள் இல்லை என்றும் கூறினார். சரி நாங்கள் துப்பரவு செய்கின்றோம் என கூறி மிக மிக விரைவாக என் சமுர்த்தி சங்க தலைவிகள் மிக மும்முரமாக செயற்பட்டு இம்மண்டபத்தை சுத்தப்படுத்தினர். ஒரு மேசையோ கதிரையோ ங்கிருக்கவில்லை அனைத்தையும் சங்க தலைவிகளே ஏற்றி இறக்கி மாலை 3.00 மணிக்கு முதல் சகல வேலைகளையும் முடித்து தயாரானோம்.

தாய் சங்க தலைவி ம.தங்கேஸ்வரி அவர்களின் தலைமையில் 12.10.2010 அன்று 3.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் பிரதம அதீதியாக  கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மணோகிதராஜ் அவர்களும், கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், இருதயபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.சுபந்தினி அவர்களும் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்ஜோதி அவர்களும் கல்லடி வேலூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.தேவதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கல்லடிவேலூரில்  சமுர்த்தி பயனுகரியாக சங்கங்களில் இயங்கும் பெண்களின் கணவர்மாராகிய முதியோரும், இக்கிராமத்தில் 105 வயது வரை சமுர்த்தி பயனுகரியாக வாழ்ந்து வரும் மூதாட்டியும் கௌரவிக்கப்பட்டார்கள்.

 





இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகான சபை உறுப்பினர் தமதுரையில் இன்றைய காலகட்டத்தில் வயதான முதியோரை புரம் தள்ளி வைத்து விட்டு தத்தம் வேலைகளை பார்க்கும் இன்றைய சமூகத்தில் ஒரு கிராமம் தனித்து நின்று அக்கிராமத்தில் சமுர்த்தி பெறும் 10 குடும்பங்களில் இருக்கும் 10 முதியோரை தெரிவு செய்து இன்றைய நாளில் கௌரவிப்பதைக் கண்டு நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அது மாத்திரமன்றி 105 அகவையை தான்டும் க.அன்னம்மா என்ற முதிய அம்மையாரை இதுவரை காலமும் யாரும் இனம் காட்டாததை சமுர்த்தி திட்டம் ஊடாக வெளிக் கொண்டு வந்ததை நிச்சயமாக பாராட்ட தான் வேண்டும். ஒருவன் இறந்த பின்பு வாழ்த்துவதை விட வாழும் போதே சாதனையாளராக கௌரவிக்க வேண்டும். இதை தான் இச்சங்கம் செய்துள்ளது. இங்கு கௌரவிக்கப்படுபவர்கள் பல இன்னல்களை சந்தித்துள்ளார்கள் தீர்க்கப்படாத பல பிரச்சனைகளை கொண்டுள்ளார்கள் இதை இங்கு வெளியிட்டு இருக்கும் இத் தொகுப்பு கையேடு மூலம் நான் அறிந்துள்ளேன் இதை மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல தீர்வை பெற்றுத்தருவேன். மிக முக்கியமாக குறிப்பிடவேண்டுமானால் இக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் பா. ஜெயதாஸனை நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சமுர்த்தி கண்காட்சியில் சினேகம் பத்திரிகை வெளியீட்டில் தான் சந்தித்தேன் சிறந்த ஆற்றல் மிக்கவர் இக்கிராமத்தை எவ்வாறு தன் அன்பினால் தக்க வைத்துள்ளார் என்பதை இந்நிகழ்வின் மூலம் நான் கண்டு கொண்டேன், மாகானசபை நடத்த வேண்டிய இந்நிகழ்வை மிக சிறப்பாக வடிவமைத்து மக்களின் ஒத்துழைப்புடன் நடத்தியுள்ளதை பாராட்ட வேண்டும் என்றார். இதை தொடர்ந்து கௌரவிப்பு இடம்பெற்றது. முதலில் 105 வயது வரை  வாழ்ந்து கொண்டிருக்கும் க.அன்னம்மாவை வாழ்நாள் சாதனையாளர் எனும் விருதை வாழும் போதே வழங்கி கௌரவிப்போம் என்ற தலைப்பில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் வழங்கி கௌரவித்தார். ஒன்று மட்டும் அன்றைய தினம் புலப்பட்டது இவ்வயதையுடைய ஒரு மூதாட்டி இக்கிராமத்தில் வாழ்கிறார் என பலருக்கு அன்று தான் தெரிந்தது அதனை வடம் பிடித்து காட்டிய பெருமை இக்கிராம சமுர்த்தி சங்கங்களுக்கே சாரும் எனலாம். மற்றும் வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் எதனையும் பொருட்படுத்தாமல் இந்நிகழ்வில் கலந்து கொண்டது அனைவரது கண்களிலும் கண்ணீர் சிந்த வைத்து விட்டது. இவர்களுக்கு சமுர்த்தி ஒன்றியத்தின் மூலம் பணப்பரிசும் வழங்கப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கப்ட்டது. ன்று மட்டும் உண்மை எந்த நிறுவனத்தின் உதவியோ, திணைக்கத்தின் உதவியோ இன்றி தாமாகவே உதவியை பெற்று இப்பாரிய வேலைத்திட்டத்தை என்னுடன் தோளோடு தோள் நின்று உழைத்த சமுர்த்தி ஒன்றியத்திற்கு னது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்நிகழ்வினை என் சக உத்தியோகத்தரும் நண்பருமாகிய  ந.ரவீந்திரகுமார் அவர்கள் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 தொடரும்.....























Comments