கொவிட் - 19 தொற்றாகிய சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தால் உலர் உணவு வழங்கி வைப்பு...

 கொவிட் - 19 தொற்றாகிய சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தால் உலர் உணவு வழங்கி வைப்பு...

 நாட்டில் தற்போது கொரானா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியுள்ள இக்கால கட்டத்தில் தம் உயிரையும் கருதாமல் மாவட்ட செயலகங்கள், வங்கிகள் மற்றும் களத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கொவிட்-19 காரணமாக தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு பத்தாயிரம் (10000/=) ரூபாய் பெறுமதியான உலர் உணவுகளை வழங்கி வைக்குமாறு சமுர்த்தி திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் உள்ள சகல மாவட்டங்களிலும் பாதிப்பிற்குள்ளான சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இவ்நிவாரண உதவி தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

 மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்போதைய கால கட்டத்தில் கூடுதலான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்கள். அவர்களுக்கான உலர் உணவு பொதிகள்  இன்று வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு  யாரும் வெளியே வர வேண்டாம் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது






Comments