SLTS நிறுவனத்துடன் இனைந்து கணணிமயமாக்கல் இறுதிப்பணியில் சமுர்த்தி திணைக்களம்.......

SLTS நிறுவனத்துடன் இனைந்து கணணிமயமாக்கல் இறுதிப்பணியில் சமுர்த்தி திணைக்களம்.......


இலங்கையில் நாடு பூராவும் உள்ள 1043 சமுர்த்தி வங்கிகளையும் கணணி மயமாக்கி இயங்கச் செய்வதற்காக SLTS நிறுவனத்துடன் இனைந்து சமுர்த்தி திணைக்களம் தன் இறுதிக்கட்ட பணியை செய்து வருகின்றது. இந் நடவடிக்கைகளை அன்மையில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அவர்கள் அன்மையில் பார்வையிட்டார்.

 தற்போது பெரும்பாலான சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு மக்களுக்கான துரித சேவையை வழங்கி கொண்டிருக்கின்றது. இந்த கணணி மயமாக்கல் பணியின் இறுதிக்கட்டமான சமுர்த்தி வங்கிகளில் ATM இயந்திரங்களை இனைத்து மக்களுக்கான துரித சேவையை வழங்கவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளையும் ATM இயந்திரங்களின் செயற்பாட்டினையும்  சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி அவர்கள் SLTS நிறுவனத்தின் இயக்குனர்களுடன் அன்மையில் பார்வையிட்டார். 

 இந்த ATM இயந்திரத்தின் ஊடாக மக்கள் பணத்தை பெற்றுக் கொள்வதுடன், பணத்தை வைப்பிடவும், தம் கணக்கு மீதிகளை அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகள் முடிவுற இன்னும் சொற்ப காலங்களே உள்ளது.









Comments