சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் கட்டாயம் வீட்டுத்தோட்டம் செய்ய வேண்டும் - மண்முனை பற்று பிரதேச செயலாளர்.....
சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் கட்டாயம் வீட்டுத்தோட்டம் செய்ய வேண்டும் - மண்முனை பற்று பிரதேச செயலாளர்.....
சமுர்த்தி நிவாரணம் பெறும் ஒவ்வொரு சமுர்த்தி பயனுகரிகளின் வீடுகளிலும் கட்டாயம் வீட்டுத்தோட்டம் மேற்கொள்ள வேண்டும் என தாம் தெரிவித்துள்ளதாக மண்மனை பற்று பிரதேச செயலாளர் திருமதி.சச்சிதானந்தி நவச்சிவாயம் அவர்கள் தெரிவித்துள்ளார். 09.07.2021 அன்று மண்மனை பற்று பிரதேச செயலகத்தில் 200000 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் முதல்கட்ட வேலைத்pட்டங்களை ஆரம்பித்து வைத்த போதே பிரதேச செயலாளர் மேற் கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் சமுர்த்தி நிவாரனத்தை பெறுவதால் மாத்திரம் ஒருவர் முன்னேற்றமடைவதில்லை அவரது முயற்சியால் சமுர்த்தி வங்கிகளில் கடன்களை பெற்று சுயதொழில் முயற்சிகளை ஆரம்பித்து முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றும். சமுர்த்தி நிவாரனம் பெறும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் கட்டாயம் ஒரு சுயதொழில் முயற்சியில் ஈடுபடவேண்டும் எனவும் கூறினார். இன்று திணைக்களங்களின் ஊடாக உத்தியோகத்தர்கள் இங்கு வருகை தந்து உங்கள் தேவைகளை கண்டறியவுள்ளனர். மண்முனை பற்று பிரதேச செலயகத்திற்கு 300 கருத்திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று கைத்தொழில் கருத்திட்டத்திற்கு 90 சமுர்த்தி பயனுகரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மண்முனை பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி.S.லோஜினி அவர்களும், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.சித்தி பாத்து அவர்களும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர் S.வினோத் அவர்களும், விதாதா திணைக்களத்தின் உத்தியோகத்தர் K.இலக்கணகுமார் அவர்களும், கிராமிய தொழில் துறை திணைக்களத்தின் உத்தியோகத்தர் A.உமாமணாளன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர் ளு.வினோத் அவர்கள் இவ்வேலைத்திட்டத்தை சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக முதல் தடவையாக மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் நடத்த அனுமதித்த பிரதேச செயலாளருக்க நன்றிகளை தெரிவிப்பதுடன் தெரிவு செய்ய்ப்படும் சமுர்த்தி பயனுகரிகளை தங்கள் நேரடி கண்காணிப்பில் தேவைகளை பரிசீலனை செய்து அதற்குரிய பயிற்சிகள் மற்றும் உபகரணங்களை தெரிவு செய்து கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment