வவுனதீவு பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வார வேலைத்திட்டம்.....

 வவுனதீவு பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வார வேலைத்திட்டம்.....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2021 ஜுலை 01 - 2021 ஜுலை 07ம் திகதி வரை சௌபாக்கியா சமுர்த்தி வாரம் 2021 இனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நாடுபூராகவும் மேற்கொள்ளப்படுகின்றது. 

அதனை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் சௌபாக்கியா  திட்டத்தின் மூலம் நிர்மானிப்பு செய்யப்பட்ட வீட்டினை கையளித்தல் நிகழ்வு மங்கிகட்டு கிராம சேவகர் பிரிவில் இன்றைய தினம் பிரதேச செயலாளர் S.சுதாகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . மேலும் இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் K. தங்கத்துரை, வவுனதீவு சமுர்த்தி தலைமையக முகாமையாளர்  வா.கலைச்செல்வி  அவர்களும் கரவெட்டி சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி. பி. அசோக்குமார், பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ் சௌபாக்கியா வாரத்தில் சிப்தொ புலமை பரிசில் பெற்ற 228 மாணவர்களுக்கு கொடுப்பணவும், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கான அறநலு கடன்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....

 முன்னைய நிலை......


தற்போதைய  நிலை......









Comments