சௌபாக்கியா சமுர்த்தி வாரத்தை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு நிகழ்வுகள்......
சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மின்சார வசதி யற்ற குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குதல் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குதல் சமூர்த்தி லொத்தர் வீடுகள் பயனாளிகளுக்கு கையளித்தல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் R.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மின்சார வசதியற்ற 24 குடும்பங்களுக்கு மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டதுடன் உயர் தரம் கற்கும் 273 மாணவர்களுக்கு சிப்தொர புலமைப்பரிசில் கொடுப்பணவு வழங்கப்பட்டதுடன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு அறநலு கடன் 44 சமுர்த்தி பயளாளிகளுக்கும், வழங்கப்பட்டன. அத்தோடு லொத்தர் வீடு விசேட வீடுகள் நான்கு சமுர்த்தி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் A.தனேந்திரன் முகாமைத்தவப் பணிப்பாளர் திரு.தியாகராசா, வங்கி முகாமையாளர்கள் திரு.பத்மநாதன், திரு.தர்மப்பிரியா, திரு.யோகச்சந்திரன். திரு.தவேந்திரராசா திட்ட முகாமையாளர் சுதாகினி சமுா்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் கிராம சேவக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோகர்கள் கலந்த கொண்டிருந்தனர்
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment