சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரில் மேலும் இரண்டு சமுர்த்தி பயனாளியிடம் வீடுகள் கையளிப்பு...
சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரில் மேலும் இரண்டு சமுர்த்தி பயனாளியிடம் வீடுகள் கையளிப்பு...
சமுர்த்தி திணைக்களத்தால் நாடுபூராவும் சௌபாக்கியா வாரத்திற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 01.07.2021 அன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராகேணி கிராமத்தில் சௌபாக்கியா வீடு ஒன்று சமுர்த்தி பயனாளியிடம் பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌயூத் அவர்களால் கையளித்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 06.07.2021 அன்று மேலும் இரண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான லொட்டரி வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகளை பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌயூத் அவர்களால் கையளிக்கப்பட்டன.
இதில் முக்கிய விடயம் என்ன வென்றால் மிச்நகரில் மாற்றுத்திறனாயான சமுர்த்தி பயனுகரிக்கு ஒரு வீடு கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் ஏறாவூர்-3 ஒரு சமுர்த்தி பயனாளிக்கும் வீடு கையளிப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K..கணேசமூர்த்தி அவர்களும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்.S.A.M.பஸீர் அவர்களும், கருத்திட்ட முகாமையாளர் M.I.M.இசாட் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.M.அஸீஸ் அவர்களும், கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சகலரும் சுகாதார முறையை கடைபிடித்து நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment