வாகரை பிரதேச செயலகத்தால் சௌபாக்கிய வாரத்தில் சேதனை பசளை தயாரிப்பு வேலைத்திட்டம்.....

 வாகரை பிரதேச செயலகத்தால் சௌபாக்கிய வாரத்திற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு.... 

சௌபாகியா வார வேலைத்திட்டங்கள் ஊடாக வாகரை பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சகல வேலைத்திட்டங்களும் பிரதேச செயலாளர் சு.ஹரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதன் போது லோட்டரி வீட்டுத்திட்டத்தில் வட்டவான் கிராம பிரிவில் இரண்டு வீடுகளும், காயாங்கேணி கிராமத்தில் ஒரு வீடும், மாங்கேணி தெற்கு கிராமத்தில் ஒரு வீடுமாக நான்கு வீடுகள் சமுர்த்தி பயனாளிகளிடம் பிரதேச செயலாளர் சு.ஹரன் அவர்களின் தலைமையில் கையளிக்கப்பட்டது.

மற்றும் 75 சமுர்த்தி பயனாளிகளின் பிள்ளைகளுக்கான சிப்தொர புலமை பரிசில் கொடுப்பணவுகளும் பிரதேச செயலாளர் சு.ஹரன் அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இத்துடன்  101 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மூலமாக  135 சமுர்த்தி பயனாளிகளுக்கு அறநலு கடன்களும் வழங்கி வைக்கப்பட்டது.



மற்றும் சேதனப்பசளைக்கான பயிற்சியானது 06.07.2021 அன்று காயாங்கேணியில் உள்ள ஒரு சமுர்த்தி பயனுகரியின் இல்லத்தில் நடைபெற்றது. இதன் போது இக்கள பயிற்சியையும் விரிவுரையையும் வாகரை விவசாய போதானா ஆசிரியர் இ.பிரபாகரன் அவர்களால் நடாத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலக் சமுர்த்தி தலைமையக முகாமையாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான க.கலைவாணி அவர்களும், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ச.கலைவாணி அவர்களும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும், சமுர்த்தி பயனுகரிகளும் கலந்து கொண்டனர்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....








Comments