சமுர்த்தி சௌபாக்கிய வார நிகழ்வுகள் கிரான் பிரதேச செயலகத்தில்...
சமுர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு கிரான் பிரதேச செயலகத்திலும் வீட்டு லொட்டரி வீடுகள் பயனாளிகளிடம் பிரதேச செயலாளர் S.ராஜ் பாபு அவர்களால் கையளிக்கப்பட்டது.
நாடு பூராவும் தற்போது சௌபாக்கிய வார வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் அடிப்படையில் கிரான் பிரதேச செயலகத்திலும் வீட்டு லோட்டரி மூலம் கிடைக்கப் பெற்ற நிதியுதவி மூலம் நிர்மானிக்கப்பட்ட வீடுகளை உரிய பயனாளியடம் 06.07.2021 அன்று கையளிக்கப்பட்டது.
இதன் போது திகிலிவட்டை, கிரான் மேற்கு, பாலையடிதோனா ஆகிய கிராமங்களுக்குரிய பயனாளிகளுக்கே இந்த வீட்டு லோட்டரி அதிஸ்டம் கிடைத்துள்ளது. இந்நிகழ்வில் கிரான் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K..சிவபாத சேகரம், சந்திவெளி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K..சிவதாஸ் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment