நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றர் இரா.நெடுஞ்செழியன்.....
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருமாகிய இரா.நெடுஞ்செழியன் அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக பொதுச்சேவை ஆணைக்குழுவின் 2021.05.11 ஆம் திகதிய தீர்மானத்திற்கமைய அரச பொது நிர்வாக அமைச்சின்
MPA /PSDIC6 / SPPRO இலக்க 2021.07.14 ஆம் திகதிய கடிதம் மூலம் பதவி உயர்த்தப்பட்டுள்ளார் .
இவர் 1994.01.17 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்டு வாழைச்சேனை, செங்கலடி பிரதேச செயலக பிரிவுகளில் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திட்டம் ஆரம்பமாகிய காலம் முதல் 2006ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றி கடந்த 3 வருடங்களாக கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி 2021.08.02 முதல் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக கடமையை கொழும்பில் பொறுப்பேற்கவுள்ளார்.
இவர் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளராக கௌரவ ஆளுனர் அவர்களால் நியமிக்கப்பட்ட பின், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை சிறந்த செயற்திறனுக்கான விருதினை கடந்த 2020.02.28 இல் மேன்மை தங்கிய ஜனாதிபதியிடம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பொருளியல் சிறப்புக் கலைப்பட்டதாரியான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் 3 வருடங்கள் உதவி விரிவுரையாளராகவும் பொருளியல், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட பணிப்பாளர் உறுப்பினராகவும், இசைநடனக் கல்லூரியில் கணக்காய்வுக்குழு தலைவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கொரியா, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்கும் விஜயங்களை மேற் கொண்டுள்ளார். இவர் தனது முதுமாணிப்பட்டப் பின் படிப்பை (பொருளியல்) காமராஜர் பல்கலைக்கழகத்திலும், பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்துள்ளதுடன் 2017 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட தரத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைத்திட்டமிடல் சேவையில் 27 வருட கால சேவையை திருப்திகரமாக பூர்த்தி செய்துள்ளார். இவர் மேலும் பதவி உயர்வுகளைப் பெற்று கிழக்கு மண்ணிற்கு சேவையாற்ற வாழ்த்துகின்றோம் .
Comments
Post a Comment