காண்டி எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் இரண்டு வருடங்கள்......
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நான் 1997.01.07ம் திகதி நியமனம் பெற்ற போது என்னுடன் இனைந்து நியமனம் பெற்று உயிர் மூச்சு உள்ளவரை சமுர்த்திக்காக பணியாற்றிய காண்டீபன் என செல்லமாக அழைக்கப்பட்ட பசில் இராஜரெட்னம் காண்டீபன் ஏலாளசிங்கம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. இன்றும் அந்த பசுமையான நினைவுகள் என் கண் முன்னே நிற்கின்றன. சமனல வெவவில் கொண்டாடிய நாட்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக கண்டினில் தேனிர் அருந்திய காலங்கள். சமுர்த்தி வேலைத்திட்டத்தில் கலந்து திரிந்த காலங்கள் என்றும் மறக்க முடியாத தருனங்கள். இதை நான் மட்டுமல்ல செல்லா, யூட், ரவி, சிவா, சுவான், சிறி போன்றோருக்கும் இது புரியும். நான் எழுதும் நானும் என் சமுர்த்தியும் தொடரில் காண்டீயைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். காண்டீ என்று கூப்பிடால் திரும்ப வருவானா.....
Comments
Post a Comment