கானொளி மூலம் சௌபாக்கியா வார வேலைத்திட்டங்களை பார்வையிட்ட சமுர்த்தி பணிப்பாளர் நாயகம்.....

 கானொளி மூலம் சௌபாக்கியா வார வேலைத்திட்டங்களை பார்வையிட்ட சமுர்த்தி பணிப்பாளர் நாயகம்.....


யூலை-01 தொடக்கம் யூலை-07 வரை சமுர்த்தி சௌபாக்கிய வாரம் நாடுபூராவும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இவ் வேலைத்திட்டத்தில் நேரடியாக அவ்விடங்களுக்கு சென்று கலந்து கொள்ள சூழ் நிலை கொவிட் காரணமாக நாடு பூராவும் தடைப்பட்டுள்ளதால் 02.07.2021 ஆகிய இன்று  சகல மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்களின் ஊடாக ZOOM கானோளி மூலம் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகஸ்ரீ அவர்கள் கலந்துரையாடி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொண்டு  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் சமுர்த்தி லொட்டரி வீடு சமுர்த்தி பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கானொளி வாயிலாக இடம்பெற்றது.



களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் போது ஓந்தாச்சிமடம் கிராமத்தின் கணபதிப்பிள்ளை விக்னேஸ்வரன் என்பவருக்கு லொட்டரி மூலம் 200000 வழங்கப்பட்டது. அவரின் 60000 பங்களிப்புடன் அவர் தனது வீட்டை திருத்தி அமைத்துக் கொண்டார். அவருக்கான வீடு இன்று அவரிடம் கையளித்து வைக்கப்பட்டதுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு அருணலு கடன்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும்  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமைய முகாமையாளர் திருமதி.ஜீவகுமார், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் K.உதயகுமார் அவர்களும் கருத்திட்ட மகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனுகரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

01.07.2021 அன்று ஆரம்பிக்கப்பட்ட சௌபாக்கியா வார வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
ஆரம்ப புகைப்படம்.........
தற்போதைய நிலை......











Comments