சமுர்த்தியில் இனைந்த பட்டதாரிகளுக்கு கள பணிக்காக பிரதேச செயலகங்களில் இனைப்பு....
அன்மையில் சமுர்த்தி திணைக்களத்தில் இனைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு களப்பணியாற்றுவதற்காக பிரதேச செயலகங்களில் இனைப்பு செய்வதற்கான நியமன கடிதங்கள் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இவர்களுக்கான களப்பணிகளை தெளிவு படுத்துவதற்கான கூட்டம் அன்மையில் மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் இடம் பெற்றது. கொவிட் தொற்று காரணமாக குறைந்தளவிலான பட்டதாரிகளை அழைத்து கட்டம் கட்டமாக இந்நிகழ்வினை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்கள் நடாத்தி இருந்தார்.
இவர்களின் பணியானது தற்போது சமுர்த்தியின் செயற்பாடுகளின் முக்கியத்துவம் பெற்றிருக்கும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை கண்கானிப்பதுடன் அதன் செயற்பாடுகளை வாராந்தம் அறிக்கையிடுவதாகும். இவர்களுக்கான நேரடி கண்காணிப்பை அவ்வப் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் மேற் கொள்வார்கள். இவர்கள் எதிர்வரும் 05.07.2021 முதல் அந்தந்த பிரதேச செயலங்களில் கடமைப்பொறுப்பை ஏற்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி சிரேஸ் முகாமையாளர் J.F..மணேகிதராஜ் அவர்களும் மாவட்ட சமுர்த்தி நிர்வாக உத்தியோகத்தர் திரு.சசிதரன் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்களான S.இராசலிங்கம், பத்மா ஜெயராஜா, K.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment