சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரில் சமுர்த்தி பயனாளியிடம் வீடு கையளிப்பு...
சமுர்த்தி தணைக்களம் நாடுபூராவும் யூலை 01ம் திகதி முதல் யூலை 07ம் திகதி வரை சௌபாக்கியா வாரத்தை செயற்படத்துமாறும் இதன் போது சமுர்த்தி திட்டத்தால் மேற் கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வுகளையும் ஆரம்பிக்கும் நிகழ்வுகளையும் மேற் கொள்ளுமாறு அறிவுருத்தப்பட்டதற்கினங்க 01.07.2021 அன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராகேணி கிராமத்தில் சௌபாக்கியா வீடு ஒன்று சமுர்த்தி பயனாளியிடம் பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌயூத் அவர்களால் கையளித்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி திட்டத்தின் முக்கிய செயற்பாட்டில் ஒன்று தான் வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது. இதன் அடிப்படையில் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தை சமுர்த்தி திணைக்களம் 2020ல் அறிமுகம் செய்து வைத்திருந்தது. இவ்வீட்டுத்திட்டத்திற்கு சமுர்த்தி திணைக்களம் ஆறு லட்சம் ரூபாவை வழங்கும் போது மிகுதி நான்கு லட்சம் ரூபாவை சமுர்த்தி பயனாளி இடுவதன் மூலமே இவ்வீட்டை நிர்மானித்துக் கொள்ள முடியும். ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் இவ்வீட்டுத்திட்டத்தை பெற்றுக் கொள்ள பல கிராமத்தில் இருந்தும் பல குடும்பங்கள் ஆர்வம் காட்டிய போதும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராக்கேணி கிராமத்தில் ஹயாத்து முகமது ஹபீபா உம்மாவின் குடும்பத்தை தெரிவு செய்து அவருக்கு ஒரு கல் வீட்டினை அமைத்தக் கொடுக்க ஏறாவூர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு ஆர்வம் காட்டியது
தெரிவு செய்யப்பட்ட குடும்பம் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும், குடும்பத்தில் ஏழு அங்கத்தவர்களை கொண்டதாலும், அவர்கள் ஒரு குடிசையில் வாழ்ந்து வருவதையும் கருத்தில் கொண்டு தாமே தமக்கு ஒரு அமைத்துக் கொள்ள சிறிது சிறிதாக சேமித்த வைத்திருந்த பணம் போன்றவற்றை கருத்தில் கொண்டதுடன் பல நிறுவனங்கள் அமைப்புக்களிடம் வீட்டை அமைத்து தரும்படி கோரிய போதும் இற்றைவரை தமக்கு வீடு கிடைக்கவில்லை என்கின்ற கருத்தை கேட்ட பிரதேச செயலாளர் இவ்வீட்டை இவருக்கே அமைத்துக் கொடுக்க அனுமதி வழங்கி இருந்தார்.
இக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தரும் இதற்கு உறுதுணையாக இருந்து 2020.09.28 அன்று வீட்டிற்கான அடிக்கல் நடப்பட்டு வேலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக்குடும்பத்தின் அளப்பரிய அர்பணிப்பும் தாம் ஒரு கல் வீட்டில் வசிக்க வேண்டும் என்கின்ற ஆதங்கமும் இவ்வீட்டை விரைவாக முடிக்க உதவியது. ஆரம்பத்தில் தாம் சேமித்த தொகையை கொண்டு ஆரம்ப பணிகளை தொடங்கினர். பின்னர் சமுர்த்தி திணைக்களத்தின் கட்டம் கட்டமாக வழங்கிய பணத்தையும் கொண்டு வீட்டு வேலையை நிர்மானிக்க வீட்டின் நிலை தடைப்படும் ஒரு நிலை ஏற்பட்டது அப்போது தான் ஏறாவூர் நகர் பிரதேசத்தில் இயங்கும் சதக்கா பவுன்டேசன் அமைப்பும பல செல்வந்தர்களும் இக்குடும்பத்தின் நிலையை அறிந்து உதவ முன் வந்து இன்று மிக அழகான ஒரு வீட்டை நிர்மானித்து இவ்வீட்டில் 01.07.2020 அன்று குடியேறியுள்ளார்கள். இவ்வீட்டின் தற்போதைய பெறுமதி 1750000 ஆகும்
இவ்வீட்டை நிர்மானிக்க அனுமதியளித்த பிரதேச செயலாளருக்கும், எமக்கு தைரியத்தை ஊட்டிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனிபா அவர்களுக்கும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.M.அஸீஸ் அவர்களுக்கும், சமுர்த்தி தலைமையக முகாமையாளக் கி.கணேசமூர்த்தி அவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.M..அலி அக்பர், சமுர்த்தி தலைமையக முகாமையாளக் கி.கணேசமூர்த்தி அவர்களுக்கும், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்.S.A.M.பஸீர் அவர்களுக்கும், கருத்திட்ட முகாமையாளர் M.I.M.இசாட் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹனிபா அவர்களுக்கும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் U.L.M.அஸீஸ் அவர்களுக்கும், கிராம உத்தியோகத்தர் அமீன் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
சகலரும் சுகாதார முறையை கடைபிடித்த நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்
குறிப்பு - கொவிட்-19 தொற்று அதிகரித்துவருவதால் சகலரும் சுகாதார சட்டதிட்டங்களை நாளாந்தம் கடைப்பிடித்து செயற்படுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்....
Comments
Post a Comment