சமுர்த்தி வங்கிகளில் ATM இயந்திரங்கள் பரீட்சாத்தமாக மக்கள் பாவனைக்கு.....

 சமுர்த்தி வங்கிகளில் ATM  இயந்திரங்கள் பரீட்சாத்தமாக மக்கள் பாவனைக்கு.....

 சமுர்த்தி வங்கிகளில் ATM இயந்திரங்கள் மூலம் சமுர்த்தி பயனாளிகள் தங்கள் இலகு சேவையை பெறுவதற்காக நேற்றைய தினம் 08.07.2021 அன்று நீர்கொழும்பு மாவட்டத்தில்  பிட்டிபான சமுர்த்தி வங்கியில் ATM இயந்திரம் வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக பரீட்சாத்தமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் மிக இலகுவாக தம் சேவைகளை சமுர்த்தி வங்கியில் முடிக்க கூடியதாக இருந்ததாக குறிப்பிட்டார்கள். தற்போது பரீட்சாத்தமாக செயற்படும் இவ்வேலைத்திட்டம் இனிவரும் காலங்களில் சகல சமுர்த்தி வங்கிகளிலும் செயற்படவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments