நானும் என் சமுர்த்தியும் - 51ம் தொடர்.......
சமுர்த்தி திட்டத்தில் 2007ம் ஆண்டு தொடக்கம் புகைத்தல் எதிர்ப்பு கொடிவாரத்தை சேமிப்பு வாரமாக செயற்படுத்தி வந்துள்ளது. இதன் மூலம் வருடம் தோறும் பல மில்லியன் ரூபாக்கள் சேமிக்கப்பட்டு சமுர்த்தி திட்டத்தின் கீழ் வாழும் குடும்பங்களில் வீடு இல்லாதோருக்கு வீடமைத்துக் கொடுத்தல், கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பாரிய நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை இலங்கை பூராவும் சமுர்த்தி அதிகாரசபை நடைமுறைப்படுத்தி வந்தது. இதன் அடிப்படையில் 2007ம் ஆண்டில் 51.9 மில்லியன் ரூபாவும், 2008ம் ஆண்டில் 68.1 மில்லியன் ரூபாவும், 2009ம் ஆண்டு 83.2 மில்லியன் ரூபாவும், 2010ம் ஆண்டு 79.3 மில்லியன் ரூபாக்களும் சேமித்து சாதனையும் படைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்களின் பெயர் விபரத்தை வலய மட்டத்தில் கோரப்பட்டிருந்தது. ஏற்கனவே 2008ம் ஆண்டு கல்லடி வேலூர் கிராமத்தில் மீன்பிடி மற்றும் கதிரை வாடகைக்காக 1% வீத வட்டியுடன் 20 மாத தவனையில் 2,94,000 வழங்கப்பட்டிருந்தது. இக்கடனை நான் வந்து தான் அறவீடு செய்தும் இருந்தேன் இதை வழங்கினால் அறவீடு செய்ய முடியுமா? என சிந்தித்தவனாக சமுர்த்தி ஒன்றியத்தை அழைத்து கலந்துரையாடினேன். சரியான நபரை தெரிவு செய்து வழங்கலாம் என கூறினர்.
ஒக்டோபர்-01 சர்வதேச சிறுவர் முதியோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதால் நாமும் அதை நடாத்தவது தொடர்பாக சமுர்த்தி ஒன்றியத்துடன் கலந்துரையாடினேன். இதன் போது ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ஒவ்வொரு முதியோரை தெரிவு செய்து கௌரவிப்போம் என முடிவெடுத்தோம். இதன் போது கல்லடி வேலூர் கிராமத்தில் 105 வயது மதிக்கத்தக்க ஒரு சமுர்த்தி பயனுகரி வாழ்வதாக நான் தகவல் தெரிவித்தேன் அவர்களையும் கௌரவிப்பதற்கான அனுமதியையும் கோரி இருந்தேன். இதற்காக ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபருடன் தொடர்பை ஏற்படுத்தி மண்டப ஒழுங்கையும் ஏற்படுத்திக் கொண்டு தாய் சங்க தலைவியான மா.தங்கேஸ்வரியிடம் சகல பொருப்புக்களையும் எவ்வொரு சங்கத்திற்கும் பகிர்ந்தளிக்குமாறு கூறினேன். கௌவிக்கப்படவுள்ள 9 சங்கத்தின் முதியவர்களின் பெயர் விபரங்களை மிக விரைவாக தெரிவு செய்து தருமாறும் கோரி இருந்தேன்.
தொடரும்......
சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்வலத்தின் பின் நிகழ்வில் மாணவர்கள்.....
Comments
Post a Comment