நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (49ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (49ம் தொடர்).......

2010ம் ஆண்டிற்கான 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை நடைபெறுவதற்காக காலம் நெருங்கி வந்தது. அப்போது ஸ்ரீ சக்தி வித்தியாலய மாணவர்களுக்கான இரவு நேர வகுப்புக்களை ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்ஜோதி அவர்கள் நடாத்தி வந்தார். எனது கிராம சமுர்த்தி பயனுகரிகளின் கல்வியை ஊக்குவிக்க நாமும் என்ன செய்யலாம் என முடிவெடுத்து ஒன்றியத்தின் உதவியுடன்  2010ம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் கல்லடிவேலூர் கிராமத்தின் வறிய மாணவர்களுக்கான இலவச் கருத்தரங்கை நடத்த ஒன்றியத்தின் அனுமதி கோரி இருந்தேன் அவர்களும் அனுமதியை வழங்கி இருந்தனர். 31.07.2010,01.08.2010 ஆகிய இருதினங்களில் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில்  நடாத்துவதாகவும் இதற்கு பிரதான அனுசரனையை மட்டக்களப்பு செலிங்கோ (லைவ்) நிறுவனம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தனர். 

31.07.2010 முதல் நாள் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்களும், மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், கல்லடி வலய சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், மட்டக்களப்பு செலிங்கோ (லைவ்) முகாமையாளர் A.சாந்தகுமார் அவர்களும், ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபர் T.அருட்ஜோதி அவர்களும் கலந்து கொண்டனர். 

பிரதிப்பணிப்பாளர் தனதுரையில் ஒரு கிராமம் தனித்து நின்று இங்குள்ள சமுர்த்தி பெறும் வறிய மக்களின் பிள்ளைகளின் கல்வியறிவை மேம்படுத்த எடுத்திருக்கும் இந்த முயற்சியை பாராட்ட வேண்டியது மிக முக்கியமான ஒரு விடயமாகும். அத்துடன் இதற்கு அனுசரனை வழங்கும் செலிங்கோ (லைவ்) நிறுவனம் தமது சமூக பணியை இது மாதிரியான சேவைகள் மூலம் தம் நிறுவனத்ததை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய கூடிய வாய்ப்பு இருப்பதை அறிந்து இதில் காலடி எடுத்து வைப்பதை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இனிவரும் காலங்களில் இவ்வேலைத்திட்டம் தொடர வேண்டும் எனவும் கூறினார். தலைமையக முகாமையாளர் தனதுரையில் வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை மேலதிக வகுப்பிற்கு அனுப்பி சித்தியடைய வைக்க முயற்சிக்கின்றார்கள் ஆனால் இம்மாதிரியான ஏழைகளுக்கு சமுர்த்தி திட்டத்தின் ஊடாக முதல் தடவையாக இலவச கருத்தரங்கை நடாத்தும் கல்லடிவேலூர் சமுர்த்தி சங்கங்களை பாராட்டமல் இருக்க முடியாது என்றார்.

வலய முகாமையாளர் தனதுரையில் இப்படிப்பட்ட ஒரு கிராமத்ததை வழி நடத்தும் உத்தியோகத்தரை பாராட்டுவது தான் சாலச் சிறந்தது என்றார். அதிபர் தனதுரையில் 5ம் ஆண்டு புலமை பரீட்சையில் எமது பாடசாலை சற்று தளர்வடைந்துள்ள இந்த நிலையில் இக்கிராம  சமுர்த்தி மக்கள் மூலம்  தங்கள் பிள்கைளை தாமே தரம் உயர்த்த வேண்டும் என்ற ஒரு சிந்தனையை ஏற்படுத்தி தந்த சமுர்த்தி உத்தியோகத்தரை நான் என்றென்றும் பாராட்ட கடமை பட்டுள்ளேன் என்றார்.
செலிங்கோ (லைவ்) முகாமையாளர் தமதுரையில் செலிங்கோ நிறுவனம் வருடாந்தம் இப்படிப்பட்ட சமூக சேவை வேலைத்திட்டத்திற்கு 50 இலட்சம் ரூபாவை இலங்கை முழுவதும் செலவு செய்வதாகவும் இப்படிப்பட்ட ஒரு நல்ல சேவையை இக்கிராமத்தில் முன்னெடுக்க உதவி செய்த உங்கள் சமுர்த்தி உத்தியோகத்தரை பாரட்டமல் இருக்க முடியாது என்றார். முதல் நாள் கருத்தரங்கை மட்டக்களப்பு வலய கல்வி ஆரம்ப பிரிவு ஆசிரியை திருமதி சுந்தரலிங்கம் நடாத்தினார். இரன்டாம் நாள் கருத்தரங்கை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர் திரு.ஜெயக்காந்தன் நடத்தினார். இக்கருத்தரங்கில் சுமார் 50 சமுர்த்தி பெறும் வறிய மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 என் வாழ்நாளில் நான் என்னென்ன செய்ய வேண்டும் என எண்ணினேனோ அதை இக்கிராமத்தின் ஊடாக மிக எளிதாக நடாத்த கூடியதாக இருந்தது இதற்கு முழுக்காரணம் சமுர்த்தி ஒன்றியம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 5ம் ஆண்ட புலமை பரீட்சைக்கு ஆயத்தமாகும் வேலைத்திட்டத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் நடைமுறைப்படுத்தி இருந்தது. 2010.08.16ம் திகதி டேபா மண்டபத்தில் மண்முனை வடக்கு சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் திரு.சுதாகர் அவர்களும் மண்முனை வடக்கு வலய கல்வி பிரதிப்பணிப்பாளர் திரு.டேவிட் அவர்களும் கலந்து கொண்டு பயிற்சி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தனர். இக்கருத்தரங்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி நிவாரனம் பெறும் குடும்பங்களின் இருந்து 175 மாணவ மாணவிகள் கலந்த கொண்டனர். இவர்களுக்கான கருத்தரங்கை கொழும்பில் இருந்த வருகை தந்த திரு.கிரிதரன் அவர்க் நெறிப்படத்தி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  சிறுவர் நிகழ்வுக்கான ஆயத்தங்களை மேற் கொண்டு தேசிய மட்டத்திற்கு தயாரானார் சுதாகரன் திவ்யானி. நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என அச்சிறுமிக்கு வாழ்த்துக் கூறி அனுப்பிவிட்டு மறுநாள் முடிவுக்காக காத்திருந்தேன். முடிவும் வந்தது என் சந்தோசத்திற்கு அளவே இல்லை தேசிய மட்டத்தில் கல்லடி வேலூரைச் சேர்ந்த சுதாகரன் திவ்யானி முதலாமிடத்தை பெற்றதாக தகவல் எட்டியது . அத்துடன் நாவங்குடா தெற்கு நடன குழுவும் முதலிடத்தை பெற்றதாக தகவல் கிடைத்தது. வெற்றி மேல் வெற்றி கிட்டியபடியே இருந்தது.

 தொடரும்.......








Comments