நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (48ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (48ம் தொடர்).......

J.F.மனோகிதராஜ் முகாமையாளர் அவர்கள் என்னுடன் சரியாக ஒன்பது மாதங்கள் தான் பணியாற்றி இருந்தார். அந்த ஒன்பது மாதங்களில் நான் பல சாதனைகள் செய்வதற்கும் பல புதிய முயற்சிகளை செய்வதற்கும் ஊக்கமளித்தார். இவரை கட்டாயம் என் கிராமம் சார்பாக கௌரவிக்க வேண்டும் என எண்ணி ஒன்றியத்தை அழைத்து அனுமதி கோரினேன். இதுவரை காலமும் எமது கிராமத்திற்கு கடன் கூட கிடைக்காமல் இருந்து எமக்கு கடன் வழங்கியவருக்கு கட்டாயம் பிரியாவிடை நிகழ்வு நடத்த வேண்டும் என கூறி ஒன்றியமும் அனுமதி வழங்கினார்கள். 

 இதற்கான நிகழ்வை கிராமத்தில் 2010.06.20ம் திகதி அன்று ஒன்றிய தலைவி மகேந்திரராஜா தங்கேஸ்வரி தலைமையில ஏற்பாடு செய்தேன். J.F.மனோகிதராஜ் அவர்களையும் அவரது பாரியாரையும், பிள்ளைகளையும் அழைத்திருந்தோம். அவர்களின் வருகையுடன் நிகழ்வை நடாத்தினேன். இந்நிகழ்வில் புதிதாக வருகை தந்த சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும், கல்லடி வலயத்திற்கு புதிதாக வந்த சமுர்த்தி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும், புதிதாக புளியந்தீவு வலயத்திற்கு புதிதாக வந்த K.நவரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். எனதுரையில் மனோகிதராஜ் சேர் அவர்கள் எனக்கு ஆசானாக இருந்துள்ளார் என்று கூறும் போதே என் கண் கலங்கி விட்டது. இவரின் முயற்சியால் தான் நான் கல்லடி வேலூர் கிராமத்தை கண்டேன் பல வெற்றிகளை பெற்றுள்ளேன் என கூறினேன். நிகழ்வின் நாயகன் பேசும் போது ஒரு சிறந்த உத்தியோகத்தர் தான் ஜெயதாசன் நானே சில விடயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன் எந்த விடயத்தை செய்ய வேண்டுமென்றாலும் உடனே செய்ய வேண்டும் என்கின்ற ஆவா அவரிடம் கொட்டிக் கிடக்கின்றது. கல்லடி வேலூர் கிராமத்திற்கு முதலில் கடன் கொடுப்பது என்றால் எனக்கு பயம் எப்படி இதை அறவிடுவது என்று ஆனால் ஜெயதாசன் கடமையேற்ற பின் ஒரு பிரச்சனையும் இல்லாமல் தற்போது கடன் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். ஒரு கிராமம் என்னை அழைத்து இப்படி ஒரு நிகழ்வை நடாத்துவது எனக்கு பெருமை தருவதாகவும் குறிப்பிட்டார். இறுதியில் லட்சுமி சமுர்த்தி சங்கம், அபஹாமியா சமுர்த்தி சங்கம் பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன் அவருக்கு நினைவு சின்னமும் பரிசில்களும் கல்லடி வேலூர் மக்காளால் வழங்கி வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

F.J.மனோகிதராஜ் முகாமையாளருக்கான மற்றுமொரு பிரியாவிடை நிகழ்வும் புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் கல்லடி சமுர்த்தி வங்கியால் 14.09.2010 அன்று சிறப்பாக நடாத்தப்பட்டது. 23.06.2010 தொடக்கம் தான் மாவட்ட செயலகத்தில் பணியாற்றவுள்ளதாகவும் இதுவரை காலமும் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதுடன் புதிய முகாமையாளருக்கும் பூரண ஒத்தழைப்பை வழங்குமாறும் தெரிவித்து எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றார் F.J.மனோகிதராஜ்  அவர்கள்.

சிறுவர் போட்டிகள் டேபா மண்டபத்தில் 31.07.2010ம் மற்றும் 07.08.2010ம் ஆகிய தினங்களில் நடைபெற்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சுமார் 500 போட்டியாளர்கள் 200 நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் 2010ம் ஆண்டு சிறுவர் போட்டியில் 09 முதலிடங்களை  பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக் கொண்டது. மண்முனை வடக்கு பிரதேச செயலகம் 03 இடங்களை பெற்றிருந்தது. இதில் அடுத்த ஒரு மகிழ்ச்சியான செய்தியாக எனக்கு ஒரு செய்தி கிட்டியது பாடல் போட்டியில் கல்லடிவேலூரை சேர்ந்த சுதாகரன் திவ்யானி முதலாமிடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி இருந்தார். அத்துடன் மீண்டும் நாவற்குடா தொற்கு கிராமம் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.  நான் கண்ட கணவு இன்று நிறைவேறியது.

 தொடரும்.......
2010ல் F.J.மனோகிதராஜ் முகாமையாளருக்கு பிரியாவிடை நிகழ்வு, பின் வரிசையில் பிருந்தா(SDO), தாட்சாயினி(SDO), செய்துன் பீபி(SDO), எமலின்(SDO) மற்றும் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள். இருப்பவர்களில் கட்டுப்பாட்டுச்சபை தலைவர் பரமலிங்கம், ரவீந்திரகுமார்(SDO), F.J.மனோகிதராஜ்(S.M), K.தங்கத்துரை (S.M),சிறிதரன்(SDO), பிரதீபா(SDO) ஆகியோரை காணலாம்.


Comments