நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (47ம் தொடர்).......
2010ம் ஆண்டு 6ம் மாத நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள் அதிரடியாக மிகப் பெரிய மாற்றம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்தார். அது சமுர்த்தி உத்தியோகத்தர்களிடையே பதற்றமான ஒரு காலமாக காணப்பட்டது. பதற்றத்திற்கும் பரபரப்பிற்கும் குறையவே இருக்கவில்லை. இதுவரை இப்படியோனதொரு செயற்பாடு பாரிய அளவில் இடம்பெறவே இல்லை எங்கும் பதற்றம் ஆளுக்காள் என்னையாம் என்னையாம் என்கின்ற கேள்வி தான் நான் ஒருவாறு ஒருவரிடம் தகவலை அறிந்து கொண்டேன்.முகாமையாளர்கள், தலைமையக முகாமையாளர்களுக்கு இடமாற்றமாம் உண்மை தான் பல வருடகாலமாக ஒரே இடத்தில் சேவையாற்றியவர்களுக்கு இடமாற்றம் என அறியப்பட்டுள்ளதாகவும் இதை ஒரு பாரிய மாற்றமாக செய்ய வேண்டும் என்று அப்போதிருந்த சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மாசிலாமணி நடேசராஜா சிந்தித்து பலரிடம் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நபர் தெரிவித்தார். யாருக்கு எந்த இடம் என்று 2010.06.20ம் திகதி வரை யாருக்கும் தெரியாது. பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டது. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் இடமாற்றம் இடம்பெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளராக கடமையாற்றிய மாலா நெடுஞ்செழியன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கும், மாவட்ட செயலகத்தில் முகாமையாளராக கடமையாற்றி K.கணேசமூர்த்தி அவர்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளராகவும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளராகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டார்.
புளியந்தீவு சமுர்த்தி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றிய S.இராசலிங்கம் அவர்கள் மண்முனை பற்று பிரதேச செயலகத்திற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளராக பதவி உயர்வுடன் செல்ல அவ்விடத்திற்கு நவரஞ்சன் அவர்கள் சமுர்த்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இருதயபுரம் சமுர்த்தி வங்கியில் கடமையாற்றிய நிர்மலாதேவி கிரிதரன் அவர்கள் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளராக பதவி உயர்வுடன் செல்ல அவ்விடத்திற்கு திருமதி சுபந்தினி அவர்கள் சமுர்த்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டார். இருதயபுரம் கிழக்கிற்கு இடமாற்றம் வழங்கப்படவில்லை. நீங்கள் யோசிப்பது தெரிகிறது கல்லடி வலயத்தின் முகாமையாளருக்கு எங்கு என்று தானே உண்மையில் சொல்லப்போனால் கல்லடி சமுர்த்தி வங்கி கட்டப்பட்டு திறந்து 60 நாட்கள் சேவையாற்றிய பின் அவருக்கும் இடமாற்றமாம் எனும் போது யாருக்கு கவலை இல்லையோ எனக்கு கவலையாக இருந்தது. உண்மையில் எனக்கு ஊக்கம் தந்து எப்போதும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் ஒரு நபர் எம்மை விட்டு பிரியப்போகின்றாறே என்று. அது அவருக்கு நல்லது என்றால் நாம் ஒதுங்கி நின்று இடம் கொடுக்கத்தான் வேண்டும். அந்த நிலையில் தான் நாம் இருந்தோம்.
மாவட்ட செயலகத்திற்கு பணி செய்வதற்காக அவரை சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் அழைத்திருந்தார். இவரின் இடத்தை நிரப்புவதற்காக யார் கல்லடி சமுர்த்தி வங்கியின் புதிய முகாமையாளர் ஒரே பதற்றம் யார் அவர் எவ்வாறு இருப்பார்கள் என்று எல்லோருக்கும் பதற்றம். தலைமைய முகாமையாளராக நியமிக்கப்பட்ட K.கணேசமூர்த்தி அவர்களை கச்சேரிக்கு செல்லும் போது சந்தித்துள்ளேன் ஆனால் அவர் எப்படி என்று தெரியவில்லை. சரி பார்ப்போம் எப்படி நம் வேலை செல்லும் என்று சிந்தித்தவனாக K.தங்கத்தரை முகாமையாளரை விசாரித்து பார்த்தால் ஏற்கனவே மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியில் சிறப்பாக பணியாற்றியதாக கூறினார்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கல்லடி வங்கியும் பெரிய வங்கியாக இருந்ததால் இவரிடம் இந்த பதவி ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்கள்.
எப்படி எப்படி எல்லாம் இந்த இடமாற்றத்திற்கு இடையூறு ஏற்பட்ட போதிலும் தன் திறமையாலும், தன் நேர்த்தியான பேச்சாலும் யாருக்கும் சோரம் போகாமல் வெற்றியரமாக சகல இடமாற்றங்களையும் செய்து முடித்தார் மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள்....
தொடரும்.......
2009ல் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் அதிக சேமிப்பிற்கு எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்
Comments
Post a Comment