நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (46ம் தொடர்).......

 நானும் என் சமுர்த்தியும் - இரண்டாம் பாகம் (46ம் தொடர்).......

தொட்டது எல்லாம் வெற்றியாகவே இருந்தது அதற்கு மக்களின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகவும் இருந்தது. மே மாதம் தொடங்கியது அடுத்த செயற்பாட்டிற்கு தயாரானேன். புகைத்தல் எதிர்ப்பு வாரம் வேலைத்திட்டத்திற்கு முன் ஆயத்த பணிகளை செய்ய சமுர்த்தி ஒன்றியத்தை அழைத்து கூட்டம் நடாத்தினேன். ஒவ்வொரு சங்கமும் கட்டாயம் ஒவ்வொரு உண்டியல் நிரப்பபடவேண்டும். ஒரு சங்கம் எத்தனை உண்டியல் வேண்டுமானலும் கோரலாம் ஆனால் பண சேகரிப்பில் செல்லும் போது குழுவாக தான் செல்ல வேண்டும் எனவும் ஒரு சங்கம் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

மே 31 அன்று ஸ்ரீ சக்தி வித்தியாலயத்துடன் இனைந்து கல்லடிவேலூர் சமுர்த்தி ஒன்றியம் புகைத்தல் எதிர்ப்பிற்காக பாரிய எதிர்ப்பு ஊர்வலத்தையும் கொடி விற்பனையையும் நடாத்தியது. பாடசாலை வளாகத்தில் அதிபர் T.அருட்சோதி அவர்களுக்கு கொடியினை வழங்கியவுடன் ஆரம்பித்த எதிர்ப்பு ஊர்வலம் சரவணர் வீதியை வந்தடைந்து, கல்லடி மணிக் கூட்டு கோபுரத்தில் நின்று தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் போது கல்லடி சமுர்த்தி வலய முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். பின்னர் கல்லடி சமுர்த்தி வங்கியை சென்றடைந்தது.

 இருதயபுரம் கிழக்கில் அலுவலகம், பாடசாலை, வங்கிகள் என்று சென்ற நான் இங்கு வீதி வீதியாக சென்று சேமிப்பை சேமித்தோம். சங்க தலைவர்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் சிறப்பாக சேமிப்பை செய்தனர். இவ்வருடத்திற்கான சேமிப்பின் விபரம் எனக்கு சரியாக கிடைக்கவில்லை நிச்சயமாக அடுத்துவரும் தொடர்களில் இதன் விபரத்தை அறியத்தருகின்றேன்.

ஐந்தாம் மாச நடுப்பகுதியில் சிறுவர் போட்டிகள் ஆரம்பமாகின வருடந்தோறும் நடைபெறும் இப்போட்டிகளில் சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகள் கலந்து கொண்டு சாதனை படைத்த வந்தனர். கடந்த வருடம் இந்நிகழ்வில் கல்லடிவேலூர் கிராமம் சார்பாக ஒருவர் கூட வலய மட்டத்தில் கலந்து கொள்ள வில்லை எனவே சங்க தலைவர்களுக்கு முன் கூட்டியே அறிவித்து சிறுவர்களை தயார் நிலையில் இருக்குமாறு கூறினேன்.

 

அதே போல் வலய மட்ட போட்டிகள் வலய காரியாலயத்தில் முகாமையாளர் J.F.மனோகிதராஜ் தலைமையில் நடைபெற இதற்கான ஏற்பாடுகளை கல்லடி வலய உதவியாளர் K.குமணன் அவர்கள் செய்து கொண்டிருந்தார். எனது கிராமம் சார்பாக நாடகம், பாடல், நடனம், பேச்சு, பாடல் என சிறுவர்கள் அலை மோதினர். வலய மட்டத்தில் நாடகம், பாடல், நடனம் என அடுத்த கட்டத்திற்கு எனது கிராமம் தெரிவாகி பிரதேச மட்டத்திற்கு தயாராகினர். எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி முதல் தடவையாக பிரதேச மட்டம் செல்கிறதே என் கிராமம் என்று. எப்படியாவது தேசிய மட்டத்திற்கு ஒருவரையாவது கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற கடந்த வருட கனவு என்னுள்ளே புதைந்து கிடந்தது எனக்கு நம்பிக்கையும் தென் பட்டது. பிரதேச மட்ட போட்டிகளில் தனி நபர் நடனம், மற்றும் பாட்டுப் போட்டியில் சுதாகரன் திவ்யானி வெற்றி பெற்று மாவட்ட மட்ட போட்டிகளுக்கு தயாரானார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ஒவ்வொன்றாக மக்களை ஒன்று திரட்டி ஒழுங்கமைத்து பல வெற்றிகளை கண்டவனாக இருந்தேன்.

வலய மட்டத்திற்கான சிறுவர் போட்டிகளுக்கான  சான்றிதழ்களும் நினைவு சின்னங்களும் வழங்கும் நிகழ்வு கல்லடி சமுர்த்தி வலயத்தில் இடம் பெற்றன. இந்நிகழ்வுக்கு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் மா.நடேசராஜா அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களையும், நினைவு சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

மாவட்ட மட்ட போட்டிகள் 7ம் மாதங்களில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து, நாட்கள் நகரத் தொடங்கியது ஆறாம் மாதத்தின் நடுப்பகுதியில் காலடி எடுத்து வைக்கப்பட்ட போது தான் ஒரு செய்தி எம் காதுகளுக்கு எட்டியது. யாரும் எதிர்பார்க்காத தருனத்தில் அந்த செய்தி எட்டியது. ஏன் இவ்வளவு அவசரமாக நடைபெறுகின்றது என்று பலரும் முனு முனுத்தபடி திரிந்தோம் அந்த செய்தி என்ன அடுத்த தொடர் வரை காத்திருப்போம்...... 

 தொடரும்.......







2010ல் சிறுவர் தின போட்டிகள் கல்லடிவேலூர்



Comments